TNPL 2023: முதல் போட்டியில் ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் – லைகா கோவை கிங்ஸ் பலப்பரீட்சை!

டிஎன்பிஎல் 2023 தொடரின் முதல் போட்டியில் ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் மற்றும் லைகா கோவை கிங்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.

Lyca Kovai Kings and IDream Tiruppur Tamizhans clash today at Coimbatore in TNPL 2023 First Match

தமிழ்நாடு பிரீமியர் லீக் என்று சொல்லப்படும் டிஎன்பிஎல் தொடர் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இதில், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 3 முறை டைட்டில் கைப்பற்றியுள்ளது. டூட்டி பேட்ரியாட்ஸ் மற்றும் மதுரை பாந்தர்ஸ் அணிகள் தலா ஒரு முறை டைட்டில் வென்றுள்ளன.

அஸ்வினை எடுக்காத போதே இந்தியா மனதளவில் தோற்றுவிட்டது – விரேந்திர சேவாக்!

கோயம்புத்தூர், திருநெல்வேலி, சேலம், திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் இந்த டிஎன்பிஎல் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்த சீசனின் தொடருக்கான அட்டவணை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் வெளியிடப்பட்டது. அதன்படி இந்த 8 அணிகள் பங்கேற்கும் டிஎன்பிஎல் டி20 போட்டி வரும் ஜூன் 12 ஆம் தேதி இன்று தொடங்குகிறது. இந்தப் போட்டி வரும் ஜூலை 12 ஆம் தேதி வரையில் நடக்கிறது.

இப்படி இருந்தால் எப்படி தான் விளையாடுவது? – மைதானம் குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் கருத்து!

ஒவ்வொரு அணிக்கும் 7 போட்டிகள் வீதம் மொத்தம் 28 லீக் போட்டிகள் மற்றும் 4 பிளே ஆப் போட்டிகள் என்று 32 போட்டிகள் நடைபெறவுள்ளன. இந்த சீசன் முதல், ஐபிஎல் கிரிக்கெட்டைப் போன்று இம்பேக்ட் பிளேயர் விதியும் பின்பற்றப்படவுள்ளது. டிஆர்எஸ் முறையும் அறிமுகப்படுத்தப்பட்டு போட்டிகள் நடத்தப்பட உள்ளன. பிளே ஆஃப் போட்டிகள் மழையால் பாதிகப்பட்டால் ரிசர்வ் டே என்று சொல்லக் கூடிய அடுத்த நாள் அல்லது மாற்று தேதியில் போட்டி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் டிஎன்பில் தொடரின் 7ஆவது சீசன் இன்று பிரமாண்டமாக தொடங்குகிறது. இதில், முதல் போட்டியிலேயே ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் மற்றும் லைகா கோவை கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

TNPL 2023: டிஎன்பிஎல் தொடரில் யாரெல்லாம் இருக்கிறார்கள் தெரியுமா?

லைகா கோவை கிங்ஸ்:

ஷாருக்கான், ஜே சுரேஷ் குமார், மணிமாறன் சித்தார்த், சாய் சுதர்சன், எம் முகமது, சச்சின் பி, கௌதம் தாமரைக் கண்ணன் கே, கிரண் ஆகாஷ் எல், முகிலேஷ் யு, ஆதீக் ரஹ்மான் எம்.ஏ, வித்யுத் பி, வள்ளியப்பன் யுதீஸ்வரன், ராம் அரவிந்த் ஆர், ஹேமசரண்  பி, திவாகர ஆர், ஜாதாவேத் சுப்பிரமணியன், சுஜய் எஸ், ஓம் பிரகாஷ் கே எம்.

பயிற்சியாளர்: ஸ்ரீராம் சோமயாஜுலா   கேப்டன்: ஷாருக்கான்

ஐடிரீம் (IDream) திருப்பூர் தமிழன்ஸ்:

துஷார் ரஹேஜா, விஜய் சங்கர், ஆர் விவேக், ஆர் சாய் கிஷோர், அனிருத் சீதா ராம் பி, சதுர்வேத் என் எஸ், ஜி பெரியசாமி, த்ரிலோக் நாஹ் ஹெச், விஷால் வைத்யா கே, ராகுல் அய்யப்பன் ஹரீஷ், கணேஷ் எஸ், முகமது அலி எஸ், எஸ் மணிகண்டன், எஸ் ராதாகிருஷ்ணன், ஐ வெற்றிவேல், கருப்பசாமி எஸ், பி புவனேஷ்வரன், எம் ராகவன், ஜி பார்த்தசாரதி, அல்லிராஜ் கருப்பசாமி,

பயிற்சியாளர்: பரத் ரெட்டி     கேப்டன்: அருண் கார்த்திக்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios