அஸ்வினை எடுக்காத போதே இந்தியா மனதளவில் தோற்றுவிட்டது – விரேந்திர சேவாக்!

எப்போது இந்திய அணியில் அஸ்வின் இடம் பெறவில்லையோ அப்போதே இந்தியா மனதளவில் தோற்று விட்டது என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் விரேந்திர சேவாக் டுவிட்டரில் கூறியுள்ளார்.

Virendra Sehwag said India lost mentally when they didn't take Ashwin against Australia in WTC Final

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி ஓவல் மைதானத்தில் நடந்தது. இதில் முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 469 ரன்கள் எடுத்தது. இந்தியா முதல் இன்னிங்ஸில் 296 ரன்கள் எடுத்து 173 ரன்கள் பின் தங்கியிருந்தது. இதையடுத்து ஆடிய ஆஸ்திரேலியா 2ஆவது இன்னிங்ஸில் 8 விக்கெட் இழப்பிற்கு 270 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

அஸ்வின இல்லாததை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை – சச்சின் டெண்டுல்கர்!

பின்னர், 443 ரன்களை வெற்றி இலக்காக கொண்ட இந்திய அணி ஆடியது. இதில், ரோகித் சர்மா 43 ரன்களும், விராட் கோலி 49 ரன்களும், அஜிங்கியா ரஹானே 46 ரன்களும் எடுக்க மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். இறுதியாக இந்தியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 234 ரன்கள் மட்டுமே எடுத்து 209 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இந்தியா தோல்வி அடைய என்ன காரணம்? ரோகித் சர்மாவின் டாஸ் தானா?

இந்த தோல்வியின் மூலமாக 2ஆவது முறையாக இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்துள்ளது. இந்திய அணியின் தோல்வி குறித்து முன்னாள் வீரர்கள் உள்பட பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர். இது குறித்து சச்சின் கூறியிருப்பதாவது: ஆஸ்திரேலியா அணியில் டாப் 8 வீரர்களில் 5 பேட்ஸ்மேன்கள் இடது கை பேட்ஸ்மேன்கள். அப்படியிருக்கும் ரவிச்சந்திரன் அஸ்வினை அணியில் சேர்க்காதது ஏன் என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை என்று சச்சின் டெண்டுல்கர் டுவிட்டரில் கூறியிருந்தார்.

1987 முதல் அனைத்து ஐசிசி டிராபிகளை வென்ற முதல் அணி என்ற சாதனையை படைத்த ஆஸ்திரேலியா!

இதே போன்று இந்திய அணியின் முன்னாள் வீரர் விரேந்திர சேவாக் டுவிட்டரில் கூறியிருப்பதாவது: ஆஸ்திரேலியா தகுதியான வெற்றியாளர்கள். இடது கை பேட்ஸ்மேன்களுக்கு சரியான தேர்வான ரவிச்சந்திரன் அஸ்வினை இந்தியா எடுக்காத போதே மனதளவில் தோற்றுவிட்டது. மேலும் டாப் ஆர்டர் சிறப்பாக பேட் செய்ய வேண்டும். சாம்பியன்ஷிப்பை வெல்ல சிறந்த மனநிலையும் அணுகுமுறையும் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios