TNPL 2023: டிஎன்பிஎல் தொடரில் யாரெல்லாம் இருக்கிறார்கள் தெரியுமா?

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தால் நடத்தப்படும் டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடர் வரும் 12 ஆம் தேதி தொடங்க இருக்கிறது.

TNPL 2023 Players List; check Details Here

கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடர் என்று சொல்லப்படும் டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இதில், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 3 முறை டைட்டில் கைப்பற்றியுள்ளது டூட்டி பேட்ரியாட்ஸ் மற்றும் மதுரை பாந்தர்ஸ் அணிகள் தலா ஒரு முறை டைட்டில் வென்றுள்ளன.

அவுட்டாகிவிட்டால் இப்படித்தான் போய் சாப்பிடுவதா? சோறுதான் முக்கியமா? விராட் கோலியை விமர்சித்த நெட்டிசன்கள்!

ஆண்டுதோறும் நடத்தப்படும் டிஎன்பிஎல் தொடரின் 7ஆவது சீசன் வரும் 12 ஆம் தேதி தொடங்க இருக்கிறது. இந்த சீசனில் IDream திருப்பூர் தமிழன்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், ரூபி திருச்சி வாரியர்ஸ், LYCA கோவை கிங்ஸ், சேலம் ஸ்பார்டன்ஸ் மற்றும் Siechem மதுரை பாந்தர்ஸ் என்று மொத்தம் 8 அணிகள் பங்கேற்க உள்ளன.

தலை, கை, முழங்கை என்று அடி மேல் அடி வாங்கும் இந்திய வீரர்கள்; அஸ்வின் சொன்னது நடந்துருச்சு!

கோயம்புத்தூர், திருநெல்வேலி, சேலம் ஆகிய பகுதிகளில் இந்த டிஎன்பிஎல் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்த சீசனின் தொடருக்கான அட்டவணை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் வெளியிடப்பட்டது. அதன்படி இந்த 8 அணிகள் பங்கேற்கும் டிஎன்பிஎல் டி20 போட்டி வரும் 12 ஆம் தேதி தொடங்கி ஜூலை 12 ஆம் தேதி வரையில் நடக்கிறது.

ஒவ்வொரு அணிக்கும் 7 போட்டிகள் வீதம் மொத்தம் 28 லீக் போட்டிகள் மற்றும் 4 பிளே ஆப் போட்டிகள் என்று 32 போட்டிகள் நடைபெறவுள்ளன. இந்த சீசன் முதல், ஐபிஎல் கிரிக்கெட்டைப் போன்று இம்பேக்ட் பிளேயர் விதியும் பின்பற்றப்படவுள்ளது. டிஆர்எஸ் முறையும் அறிமுகப்படுத்தப்பட்டு போட்டிகள் நடத்தப்பட உள்ளன. பிளே ஆஃப் போட்டிகள் மழையால் பாதிகப்பட்டால் ரிசர்வ் டே என்று சொல்லக் கூடிய அடுத்த நாள் அல்லது மாற்று தேதியில் போட்டி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படி இருந்தால் எப்படி தான் விளையாடுவது? – மைதானம் குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் கருத்து!

அணி மற்றும் அணியில் இடம் பெற்றுள்ள வீரர்கள்:

சேப்பாக் சூப்பர் கில்லீஸ்:

யு சைதேவ், நாராயண் ஜெகதீசன், சஞ்சய் யாதவ், பாபா அபரஜித், பிரதோஷ் ரஞ்சன் ஃபால், ஹரிஷ் குமார் எஸ், சதீஷ் ஆர், ராஹில் ஷா, ரோகித் ஆர், சிலம்பரசன் எம், சிபி ஆர் , மதன் குமார் எஸ், சந்தோஷ் சிவ் எஸ், விஜய் அருள் எம், லோகேஷ் ராஜ் டிடி, ராக்கி பி, அய்யப்பன்

பயிற்சியாளர்: ஹேமங்க் பதானி

திண்டுக்கல் டிராகன்ஸ்:

ரவிச்சந்திரன் அஸ்வின், வருண் சக்கரவர்த்தி, பாபா இந்திரஜித், சுபோத் குமார் பதி, சரவண குமார் பி, ஷிவம் சிங், கிஷோர் ஜி, ஹேமந்த் குமார் ஜி, விமல் குமார் ஆர், தீரன் விபி, பூபதி வைஷ்ண குமார், மதிவாணன் எம், தமிழ் திலீபன் எம்இ, அத்வித் ஷர்மா, ரோஹன் ரவி புத்ரா, சரத் குமார் சி, அருண் எஸ், விக்னேஷ் பி, அஃபான் கதேர் எம்.

பயிற்சியாளர்: சுப்பிரமணியம் பத்ரிநாத், கேப்டன்: ஹரி நிஷாந்த்

ரூபி திருச்சி வாரியர்ஸ்:

அந்தோனி தாஸ், டி நடராஜன், டேரி எஸ் ஃபெர்ராரியோ, மோனீஷ் சதீஷ, அதிசயராஜ் டேவிட்சன், கங்கா ஸ்ரீதர் ராஜூ, சிலம்பரசன் ஆர், ஜாஃப்ர ஜமால், ஆர் அலெக்ஸாண்டர், மணி பாரதி கே, ராஜ்குமார் ஆர், ஷாஜஹான் எம், பிரான்சிஸ் ரோகின்ஸ், அக்‌ஷய் வி ஸ்ரீநிவாசன், ஈஸ்வரன் கே, கோட்சன் ஜி, முகமது அசீம் கே, சரண் டி, வினோத் எஸ் பி, கார்த்திக் சண்முகம் ஜி.

பயிற்சியாளர்: டினு யோஹன்னன்   கேப்டன்: ரஹில் ஷா

லைகா கோவை கிங்ஸ்:

ஷாருக்கான், ஜே சுரேஷ் குமார், எம் சித்தார்த், சாய் சுதர்சன், எம் முகமது, சச்சின் பி, கௌதம் தாமரைக் கண்ணன் கே, கிரண் ஆகாஷ் எல், முகிலேஷ் யு, ஆதீக் ரஹ்மான் எம்.ஏ, வித்யுத் பி, யுதீஸ்வரன் வி, ராம் அரவிந்த் ஆர், ஹேமசரண்  பி, திவாகர ஆர், ஜாதாவேத் சுப்பிரமணியன், சுஜய் எஸ், ஓம் பிரகாஷ் கே எம்.

பயிற்சியாளர்: ஸ்ரீராம் சோமயாஜுலா   கேப்டன்: ஷாருக்கான்

சேலம் ஸ்பார்டன்ஸ்:

எம் கணேஷ் மூர்த்தி, ஜெகநாத் ஸ்ரீநிவாஸ் ஆர் எஸ், கௌசிக் காந்தி எம்., அபிஷேக் தன்வர், ஆகாஷ் சும்ரா, மான் கே ஃபாப்னா, சன்னி சந்து, அபிஷேக் எஸ், முகமது அத்னான் கான், அமித் சத்விக் விபி, கௌரி சங்கர் ஜே, மோகித் ஹரிஹரன் எஸ், குரு சாய் எஸ், யுவராஜ் வி, கார்த்திகேயன் ஆர், கவின் ஆர், சச்சின் ரதி, பிரசாந்த் ஆர், அரவிந்த் எஸ்.

பயிற்சியாளர்: ராபின் பிஸ்ட்      கேப்டன்: கௌசிக் காந்தி

சீசேம் (சீகேம்) மதுரை பாந்தர்ஸ்:

கௌதம் வி, முருகன் அஸ்வின், வாஷிங்டன் சுந்தர், கௌசிக் ஜே, ஸ்வப்னில் கே சிங், ஹரி நிஷாந்த் சி, ஷிஜித் சந்திரன் பி, ஸ்ரீ அபிஷேக் எஸ், ஆதித்யா வி, குரப்னீத் சிங், ஆண்டன் ஆண்ட்ரூ சுபிக்‌ஷன் எம், தீபன் லிங்கேஷ் கே, சரவணன் பி, கிரிஷ் ஜெயின், ராகுல் டி, சுதன் டி, அஜய் கே கிருஷ்ணன், ஆயுஷ் எம், சூர்யா பி, கார்த்திக் எஸ்

பயிற்சியாளர்: ஆர் பிரசன்னா     கேப்டன்: முகமது

ஐடிரீம் (IDream) திருப்பூர் தமிழன்ஸ்:

துஷார் ரஹேஜா, விஜய் சங்கர், ஆர் விவேக், ஆர் சாய் கிஷோர், அனிருத் சீதா ராம் பி, சதுர்வேத் என் எஸ், பெரியசாமி ஜி, த்ரிலோக் நாஹ் ஹெச், விஷால் வைத்யா கே, ராகுல் அய்யப்பன் ஹரீஷ், கணேஷ் எஸ், முகமது அலி எஸ், மணிகண்டன் எஸ், ராதாகிருஷ்ணன் எஸ், வெற்றிவேல் எல், கருப்பசாமி எஸ், புவனேஷ்வரன் பி, ராகவன் எம்.

பயிற்சியாளர்: பரத் ரெட்டி     கேப்டன்: அருண் கார்த்திக்

நெல்லை ராயல் கிங்ஸ்:

ஜி அஜிதேஷ், விஎஸ் கார்த்திக், மோகன் பிரசாத், சந்தீப் வாரியர், அருண் கார்த்திக், அஸ்வின் கிறிஸ்ட் ஏ, நிதிஷ் ராஜகோபால், ஸ்ரீ நிரஞ்சன் ஆர், மிதுன் ஆர், ரிதிக் ஈஸ்வரன் எஸ், சூர்யபிரகாஷ் எல், பொய்யாமொழி எம், ஹரிஷ் என்.எஸ்., இம்மானுவேல் செரியன் பி, ரோஹன் ஜே, சுஹேந்திரன் பி, ஆதித்யா ஏ, அருண் குமார் எஸ்.ஜே

பயிற்சியாளர்: ஏஜி குருசாமி    கேப்டன்: பாபா அபரஜித்

தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரில் சாம்பியனாகும் அணிக்கு ரூ.1 கோடியும், 2ஆம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.60 லட்சமும், அரையிறுதிப் போட்டியில் இடம் பெறும் 2 அணிகளுக்கு ரூ.40 லட்சமும், மற்ற அணிகளுக்கு ரூ.25 லட்சமும் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios