Asianet News TamilAsianet News Tamil

அவுட்டாகிவிட்டால் இப்படித்தான் போய் சாப்பிடுவதா? சோறுதான் முக்கியமா? விராட் கோலியை விமர்சித்த நெட்டிசன்கள்!

விராட் கோலி ஆட்டமிழந்ததைத் தொடர்ந்து வெளியில் சென்ற அவர் உணவருந்த தொடங்கிவிட்டார்.

Is this how you go to eat when you are out? Netizens criticized Virat Kohli!
Author
First Published Jun 9, 2023, 12:16 PM IST

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முதலில் இந்தியா டாஸ் வென்றது. ஆனால், பந்து வீச்சு தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் ஆடிய ஆஸ்திரேலியா முதல் நாளில் 327 ரன்கள் குவித்தது. பின்னர் 2ஆவது நாள் ஆட்டத்தை தொடங்கிய ஆஸ்திரேலியாவுக்கு டிராவிஸ் ஹெட் 163 ரன்களும், ஸ்டீவ் ஸ்மித் 121 ரன்களும், அலெக்ஸ் கேரி 48 ரன்களும் எடுத்துக் கொடுக்கவே ஆஸ்திரேலியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 429 ரன்கள் குவித்தது.

தலை, கை, முழங்கை என்று அடி மேல் அடி வாங்கும் இந்திய வீரர்கள்; அஸ்வின் சொன்னது நடந்துருச்சு!

பின்னர், ஆடிய இந்திய அணிக்கு ரோகித் சர்மா 15 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார். சரி, அவர் தான் ஆட்டமிழந்துவிட்டார், சுப்மன் கில் இருக்கிறார் என்று சந்தோஷப்பட்ட நிலையில், அவரும் 13 ரன்களில் கிளீன் போல்டானார். ஒருகட்டத்தில் 30 ரன்களில் இந்தியா 2 விக்கெட்டை இழந்து தடுமாறியது. அதுமட்டுமின்றி 6.4 ஓவர்களில் தொடக்க வீரர்கள் இருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

இப்படி இருந்தால் எப்படி தான் விளையாடுவது? – மைதானம் குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் கருத்து!

அதன் பிறகு சட்டேஷ்வர் புஜரா மற்றும் விராட் கோலி இருவரும் இணைந்தனர். ஆனால், புஜாரா 14 ரன்களாக இருந்த போது கில் ஆட்டமிழந்ததைப் போன்று ஒரே மாதிரியாகவே ஆட்டமிழந்துள்ளார். விராட் கோலியும் 14 ரன்களில் வெளியேறினார். இந்தியா இக்கட்டான நிலையில், தொடக்க வீரர்கள் ஒவ்வொருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த வெளியேறிய நிலையில், எந்தவித வருத்தமும் இல்லாமல் தனக்கு சோறு தான் முக்கியம் என்பது போன்று விராட் கோலி உணவருந்திய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது.

ஃபாலோ ஆன் தவிர்க்குமா இந்தியா? இன்னும் 118 ரன்கள் தேவை!

இதை வைத்து நெட்டிசன்கள் பலரும் அவரை விமர்சிக்க தொடங்கிவிட்டனர். இன்று மட்டுமல்ல இது போன்ற பல கட்டங்களில் விராட் கோலி கையில் பிளேட் உடன் இருந்துள்ளார். விராட் கோலியைத் தொடர்ந்து வந்த ஜடேஜா அதிரடியாக ஆடி 48 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அடுத்து அஜிங்கியா ரஹானே மற்றும் கேஎஸ் பரத் இருவரும் அடி மேல் அடி வாங்கி காயத்தையும் பொருட்படுத்தாமல் விளையாடி வருகின்றனர்.

இரண்டாம் நாள் முடிவில் இந்தியா 5 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் மட்டுமே எடுத்து விளையாடி வருகிறது. பாலோ ஆன் தவிர்க்க இந்தியா இன்னும் 118 ரன்கள் எடுக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

அடி மேல் அடி வாங்கி போராடி வரும் இந்தியா – 2ஆம் நாள் முடிவில் இந்தியா எடுத்தது 151 ரன்கள், 5 விக்கெட்!

 

 

Follow Us:
Download App:
  • android
  • ios