மீண்டு வருமா ஆர்சிபி: இதெல்லாம் நடந்தால் ஒரு வாய்ப்பு இருக்கு; இல்லைன்னா இறைவன் விட்ட வழி தான்!

மகளிருக்கான பிரீமியர் லீக் தொடரில் கடைசி இடத்தில் உள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு இன்னும் எலிமினேட்டர் சுற்றுக்கு தகுதி பெறக் கூடிய வாய்ப்புகள் இருக்கிறது.
 

There a few more chances to RCB enter into Eliminator

மகளிருக்கான பிரீமியர் லீக் தொடரின் முதல் சீசன் கடந்த 4 ஆம் தேதி பிரமாண்டமாக தொடங்கியது. மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேபிடல்ஸ், யுபி வாரியர்ஸ், குஜராத் ஜெயிண்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு என்று மொத்தமாக 5 அணிகள் இந்த முதல் சீசனில் பங்கேற்று விளையாடி வருகின்றன. இதில், ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 போட்டிகள் விளையாட வேண்டும். அப்படி ஒரு அணிக்கு மொத்தமாக 8 போட்டிகள் நடைபெறும். புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். புள்ளிப்பட்டியலில் 2ஆவது மற்றும் 3ஆவது இடத்தில் இருக்கும் அணிகளுக்கு இடையில் எலிமினேட்டர் போட்டி நடக்கும். இதில், வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.

20 ஆண்டுகளுக்குப் பிறகு கொலவெறியில் இந்தியா; ஆஸ்திரேலியாவை பழி தீர்க்க பொன்னான வாய்ப்பு!

தற்போது புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி (4 போட்டி) உள்ளது. 2ஆவது இடத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியும், 3ஆவது இடத்தில் யுபி வாரியஸ் அணியும், 4ஆவது இடத்தில் குஜராத் ஜெயின்ட்ஸ் அணியும் உள்ளன. கடைசி இடத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி உள்ளது. இதுவரையில் 5 போட்டிகளில் விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 5 போட்டியிலும் தோல்வியை தழுவியுள்ளது.

இதையடுத்து எஞ்சிய 3 போட்டிகளில் வெற்றி பெற்றாலும், மற்ற அணிகளின் வெற்றி, தோல்வியைப் பொறுத்தைப் பொறுத்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் எலிமினேட்டருக்கான வாய்ப்பு அமையும். அது எப்படி என்றால், 

புஜாரா பந்து வீசியதைப் பார்த்து நக்கலாக ரியாக்‌ஷன் கொடுத்த அஸ்வின்; கிரிக்கெட்டை விட்டு வெளியேறவா கேள்வி

3 போட்டிகள் வெற்றி:

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இனி வரும் 3 போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும். அதுவும், யுபி வாரியர்ஸ், குஜராத் ஜெயிண்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய 3 அணிகளுக்கு எதிரான போட்டிகளில் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும். ஒரு போட்டியில் தோற்றாலும் கூட எலிமினேட்டர் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழக்கும்.

மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ்:

குஜராத் ஜெயிண்ட்ஸ் மற்றும் யுபி வாரியர்ஸ் அணிகளுக்கு எதிரான போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் ஆகிய இரு அணிகளும் வெற்றி பெற வேண்டும். யுபி வாரியர்ஸ் 2 போட்டிகளில் வெற்றி பெற்று 3ஆவது இடத்திலும், குஜராத் ஒரு போட்டியில் வெற்றி பெற்று 4ஆவது இடத்திலும் உள்ளன.

புஜாரா, கில்லுக்கு பவுலிங் தந்தது ஏன்? 17 ஓவருக்கு முன்பே டிக்ளேர் செய்ய காரணம்? வெளியானது உண்மை தகவல்!

யுபி வாரியர்ஸுக்கு எதிரான போட்டியில் குஜராத் வெற்றி பெற வேண்டும்:

மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் ஆகிய இரு அணிகளை மட்டுமே நம்பி ஆர்சிபியின் எலிமினேட்டர் தகுதி பெறும் வாய்ப்பு அமையவில்லை. மாறாக, யுபி வாரியர்ஸுக்கு எதிரான போட்டியில் குஜராத் வெற்றி பெற வேண்டும். அதோடு, மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் ஆகிய அணிகளுக்கு எதிரான போட்டியில் தோற்க வேண்டும். அப்படி சேய்தால் 4 புள்ளிகள் பெறும். இதே போன்று யுபி வாரியர்ஸ் இனி வரக் கூடிய எல்லா போட்டிகளிலும் தோல்வியடைந்தால் 4 புள்ளிகளுடன் இருக்கும். ஒரு வேளை ஆர்சிபி எஞ்சிய 3 போட்டிகளில் வெற்றி பெற்றால் 6 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் 3ஆவது இடம் பிடித்து எலிமினேட்டர் சுற்றுக்கு முன்னேறும்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியிலிருந்து காயத்தால் விலகும் இந்திய வீரர் யார் தெரியுமா?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios