புஜாரா பந்து வீசியதைப் பார்த்து நக்கலாக ரியாக்ஷன் கொடுத்த அஸ்வின்; கிரிக்கெட்டை விட்டு வெளியேறவா கேள்வி
புஜாரா பந்து வீசியைப் பார்த்து நான் வேண்டுமென்றால் கிரிக்கெட்டை விட்டு வெளியெறவா என்று ரவிச்சந்திரன் அஸ்வின் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4ஆவது டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி தொடர் நேற்றுடன் முடிவடைந்தது. இந்தப் போட்டி டிராவில் முடிந்த நிலையில், 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா 2-1 என்று கைப்பற்றி சாம்பியனானது. கடந்த 9 ஆம் தேதி அகமதாபாத் மைதானத்தில் தொடங்கிய இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதல் இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலியா 480 ரன்கள் குவித்தது. இதையடுத்து ஆடிய இந்தியா முதல் இன்னிங்ஸில் 571 ரன்கள் குவித்தது.
இதைத் தொடர்ந்து 5ஆம் நாள் ஆட்டத்தைத் தொடங்கிய ஆஸ்திரேலியா 2 ஆவது இன்னிங்ஸில் டிராவிஸ் ஹெட் 90 ரன்களில் ஆட்டமிழந்தார். மார்னஸ் லபுஷேன் மற்றும் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் இருவரும் நின்னு விளையாடிக் கொண்டிருந்தனர். ஒரு கட்டத்தில் லபுஷேன் அரைசதம் அடித்தார். இந்தப் போட்டியில் யாரலயும் வெற்றி பெற முடியாது. கண்டிப்பாக போட்டி டிரா தான் என்பது இரு அணியினருக்கும் தெரிந்த நிலையில், ஆஸ்திரேலியா டிக்ளேர் செய்வதாக இல்லை.
அப்போது, போட்டியின் 77ஆவது ஓவரை சுப்மன் கில் வீசினார். இந்த ஓவரில் ஒரு ரன் மட்டுமே எடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சட்டீஸ்வர் புஜாரா பந்து வீசுவதற்கு வந்தார். புஜாரா பந்து வீச கிரீஸ்க்கு வரும்போதே மைதானத்தில் இருந்த இந்திய அணியின் வீரர்களால் சிரிப்பை அடக்க முடியாமல் இருந்தனர். ஒரு கட்டத்தில் புஜாரா வீசியதைப் பார்த்த அஸ்வின் மோசமான ரியாக்ஷன் ஒன்றை கொடுத்துள்ளார். இந்த ஓவரில் ஒரு ரன் மட்டுமே விட்டுக் கொடுத்தார். புஜாரா வீசிய ஓவருக்குப் பிறகு நான்காவது டெஸ்ட் போட்டி டிராவில் முடித்துக் கொள்ளப்பட்டது.
இதைத் தொடர்ந்து ரவிச்சந்திரன் அஸ்வின் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: புஜாரா பந்து வீசும் புகைப்படத்தை பகிர்ந்து, நான் வேண்டுமென்றால் கிரிக்கெட்டை விட்டு வெளியேறவா? என்று ஹிந்தியில் கேட்டுள்ளார். இந்த டுவிட்டர் மற்றும் அஸ்வின் கொடுத்த ரியாக்ஷன் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அஸ்வின் டுவீட்டுக்கு பதில் கொடுத்த புஜாரா, இல்லை, இது நன்றி சொல்லத்தான் என்று பதிவிட்டுள்ளார். இதற்கு மறுபடியும் ட்வீட் பதிவு செய்த அஸ்வின், உங்களது எண்ணம் பாராட்டப்பட்டது. ஆனால், இது எப்படி திருப்பிச் செலுத்துவது என்பது ஆச்சரியமாக இருக்கிறது என்று பதிவிட்டுள்ளார்.