உலகக் கோப்பை பயிற்சிக்கான புதிய ஜெர்சியில் இந்திய அணி பயிற்சியை தொடங்கிய நிலையில், சமூக வலைதளங்களில் பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

உலகக் கோப்பை வார்ம் அப் போட்டியை முடிந்த கையோடு இந்திய அணி சென்னைக்கு புறப்பட்டுச் சென்றது. சென்னை எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் வரும் 8 ஆம் தேதி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான உலகக் கோப்பை 5ஆவது லீக் போட்டி நடக்கிறது. இதற்கு தயாராகும் வகையில், இந்திய அணி பயிற்சியை தொடங்கியுள்ளது. இந்திய அணியின் உலகக் கோப்பை பயிற்சிக்கான புதிய ஜெர்சியுடன் இந்திய அணி இன்று பயிற்சியில் களமிறங்கியது. இந்த புதிய ஜெர்சியின் நிறமோ காவி.

England vs New Zealand: உலகக் கோப்பைக்கான டிராபியை தூக்கி வந்த ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர்!

Scroll to load tweet…

Scroll to load tweet…

Scroll to load tweet…

Scroll to load tweet…

Scroll to load tweet…

இதை வைத்து டுவிட்டரில் பலரும் விமர்சிக்க தொடங்கிவிட்டனர். கடந்த 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பை இந்திய அணியின் பயிற்சிக்கான ஜெர்சியின் நிறமும் இப்போதுள்ள பயிற்சிக்கான இந்திய அணியின் ஜெர்சியின் நிறமும் ஒன்றாக இருப்பதாக விமர்சித்தனர்.

ENG vs NZ: 2023 உலகக் கோப்பை – முதல் சிக்ஸர் அடித்து ரன் கணக்கை தொடங்கிய ஜானி பேர்ஸ்டோவ்!

கடந்த 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி ஜெர்சி முதல் முறையாக மாற்றப்பட்டது. ஹோம் மைதானங்களில் நடக்கும் போட்டிகளில் ஒரு ஜெர்சியும், அவே மைதாங்களில் நடக்கும் போட்டிகளில் வேறொரு ஜெர்சியும் அணிந்து விளையாடியது. அதன் பிறகு ஒரு நாள் போட்டிக்கு ஒரு ஜெர்சியும், டி20 போட்டிக்கு ஒரு ஜெர்சியும் கொண்டு வரப்பட்டது.

ENG vs NZ: கேன் வில்லியம்சன், டிம் சவுதி, இஷ் சோதி, பெர்குசன் யாருமே இல்லை; டாஸ் வென்ற நியூசி., பவுலிங்!

இப்படி கொஞ்சம் கொஞ்சமாக அடுத்தடுத்து இந்திய அணியின் ஜெர்சியில் மாற்றம் கொண்டு வரப்பட்டு தற்போது காவி நிறமாக மாற்றப்பட்டுள்ளது. இது உலகக் கோப்பைக்கான பயிற்சிக்கான ஜெர்சி. மேலும், உலகக் கோப்பைக்கான ஜெர்சியில் நீல நிற உடையில் தோள்பட்டை பகுதியில் மூவர்ண நிறம் இடம் பெற்றிருக்கும் வகையில் ஜெர்சி இடம் பெற்றிருக்கிறது. இந்த ஜெர்சியுடன் தான் இந்திய அணி உலகக் கோப்பையில் விளையாட உள்ளது.

Cricket World Cup 2023: கேப்டன்ஸ் மீட்டிங்கில் நன்றாக அசந்து தூங்கிய தென் ஆப்பிரிக்கா கேப்டன் டெம்பா பவுமா!