இங்கிலாந்துக்கு எதிரான கடைசி 3 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா வந்த இங்கிலாந்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் இங்கிலாந்தும், 2ஆவது போட்டியில் இந்தியாவும் வெற்றி பெறவே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் 1-1 என்று சமனில் உள்ளன. இதைத் தொடர்ந்து வரும் 15ஆம் தேதி இரு அணிகளுக்கு இடையிலான 3ஆவது போட்டி ராஜ்கோட்டில் நடைபெறுகிறது. இந்த நிலையில் தான் எஞ்சிய 3 போட்டிகளுக்கான இந்திய அணியை தற்போது பிசிசிஐ அறிவித்துள்ளது.
Sri Lanka vs Afghanistan 1st ODI: சச்சின், கில் சாதனையை முறியடித்த இலங்கை வீரர் பதும் நிசாங்கா!
எஞ்சிய 3 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி:
ரோகித் சர்மா (கேப்டன்), ஜஸ்ப்ரித் பும்ரா (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், ரஜத் படிதார், சர்ஃபராஸ் கான், துருவ் ஜூரெல் (விக்கெட் கீப்பர்), கேஎஸ் பரத் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஸ்வின், அக்ஷர் படேல், குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், முகமது சிராஜ், முகேஷ் குமார் மற்றும் ஆகாஷ் தீப்.
குறிப்பு – கேஎல் ராகுல், ரவீந்திர ஜடேஜா – உடல் தகுதியை பொறுத்து இடம் பெறுவார்கள்.
இதில், விராட் கோலி இடம் பெறவில்லை. ஏற்கனவே முதல் 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியில் தனிப்பட்ட காரணம் காரணமாக விலகிய விராட் கோலி, மீண்டும் அதே காரணத்திற்காக அணியில் இடம் பெறவில்லை. முதல் போட்டியில் விளையாடிய கேஎல் ராகுல் மற்றும் ரவீந்திர ஜடேஜா காயம் காரணமாக 2ஆவது போட்டியிலிருந்து வெளியேறினர்.
முதல் 2 போட்டிகளில் விளையாடிய ஷ்ரேயாஸ் ஐயர் எஞ்சிய போட்டிகளில் இடம் பெறவில்லை. அவருக்கு முதுகு வலி ஏற்பட்ட நிலையில் எஞ்சிய போட்டியிலிருந்து விலகியதாக கூறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
