Sri Lanka vs Afghanistan 1st ODI: சச்சின், கில் சாதனையை முறியடித்த இலங்கை வீரர் பதும் நிசாங்கா!

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 210 ரன்கள் குவித்ததன் மூலமாக சச்சின் டெண்டுல்கர், சுப்மன் கில் ஆகியோரது அதிகபட்ச ஸ்கோர் சாதனையை இலங்கை வீரர் பதும் நிசாங்கா முறியடித்துள்ளார்.

Sri Lankan Player Pathum Nissanka Breaks Sachin Tendulkar and Shubman Gill Double Hundred Record During SL vs AFG 1st ODI rsk

இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் இடையிலான முதல் ஒருநாள் போட்டி நேற்று பல்லேகலே மைதானத்தில் நடந்தது. இதில், டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி இலங்கை முதலில் பேட்டிங் செய்தது. இதில் பதும் நிசாங்கா மற்றும் அவிஷ்கா பெர்னாண்டோ இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டிற்கு 182 ரன்கள் குவித்தது. பெர்னாண்டோ 88 பந்துகளில் 8 பவுண்டரி, 3 சிக்ஸர் உள்பட 88 ரன்களில் ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து வந்த கேப்டன் குசால் மெண்டிஸ் 16 ரன்களில் ஆட்டமிழக்க சமரவிக்ரமா 45 ரன்கள் சேர்த்து நடையை கட்டினார். கடைசியாக அசலங்கா களமிறங்கினார். இவர்கள் 7 ரன்கள் வரையில் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

ஐபிஎல் தொடரில் கேப்டன்களுக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா? தோனிக்கு எல்லாம் சம்பளம் கம்மி தான், அவர் தான் டாப்!

இலங்கை வீரர் பதும் நிசாங்கா 210* ரன்கள் குவித்து புதிய வரலாற்று சாதனையை படைத்துள்ளார். தொடக்க வீரராக களமிறங்கிய பதும் நிசாங்கா கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். அவர், 139 பந்துகளில் 20 பவுண்டரி, 8 சிக்ஸர் உள்பட 210 ரன்கள் குவித்து புதிய வரலாற்று சாதனை படைத்தார். மேலும், இலங்கை அணியின் முன்னாள் வீரர் சனத் ஜெயசூர்யாவின் அதிக ரன்கள் சாதனையை முறியடித்துள்ளார்.

ஜடேஜாவை கிரிக்கெட் வீரராக்கியதற்கு வருத்தப்படுகிறேன் – ஜட்டு மனைவி மீது அடுக்கடுக்காக குற்றம்சாட்டிய தந்தை!

சனத் ஜெயசூர்யா விளையாடிய 445 ஒருநாள் போட்டிகளில் 13,430 ரன்கள் குவித்துள்ளார். இதில், 28 சதங்களும், 68 அரைசதங்களும் அடங்கும். அதோடு அதிகபட்சமாக 189 ரன்கள் குவித்திருந்தார். ஜெயசூர்யா அடித்த 189 ரன்கள் தான் இலங்கை வீரரால் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராக இருந்தது. இந்த நிலையில் தான் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் பதும் நிசாங்கா 210 ரன்கள் அடித்ததன் மூலமாக அந்த சாதனையை முறியடித்து புதிய வரலாற்று சாதனையை படைத்துள்ளார்.

Pathum Nissanka: ஜெயசூர்யாவின் சாதனையை முறியடித்து ஒருநாள் கிரிக்கெட்டில் புதிய வரலாறு படைத்த பதும் நிசாங்கா!

இதே போன்று இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் 200 ரன்கள், சுப்மன் கில் 208 ரன்கள் சாதனையை முறியடித்துள்ளார். மேலும், இஷான் கிஷான் சாதனையை சமன் செய்துள்ளார். இந்தப் போட்டியில் 2ஆவதாக விளையாடிய ஆப்கானிஸ்தான் 6 விக்கெட்டுகளை இழந்து 339 ரன்கள் மட்டுமே எடுத்து, 42 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

ஐபிஎல் தொடரில் கேப்டன்களுக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா? தோனிக்கு எல்லாம் சம்பளம் கம்மி தான், அவர் தான் டாப்!

ஆப்கானிஸ்தான் அணியில் அதிகபட்சமாக அஷ்மதுல்லா உமர்சாய் 149 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். மற்றொரு வீரர் முகமது நபி 136 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதன் மூலமாக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இலங்கை 1-0 என்று கைப்பற்றியுள்ளது. 2ஆவது ஒருநாள் போட்டி வரும் 11 ஆம் தேதி பல்லேகலே மைதானத்தில் நடக்கிறது. 

எதிஹாட் ஏர்வேஸ் என்று எழுதப்பட்ட சிஎஸ்கேயின் நியூ ஜெர்சி வெளியீடு; வைரலாகும் ஜெர்சி நம்பர் 7 வீடியோ!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios