ஜடேஜாவை கிரிக்கெட் வீரராக்கியதற்கு வருத்தப்படுகிறேன் – ஜட்டு மனைவி மீது அடுக்கடுக்காக குற்றம்சாட்டிய தந்தை!
தனது மகனான ரவீந்திர ஜடேஜாவை கிரிக்கெட் வீரராக மாற்றியதற்கு தான் இப்போது வருத்தப்படுவதாக தந்தை அனிருத்சிங் ஜடேஜா கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவராக இருப்பவர் ரவீந்திர ஜடேஜா. தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய நிலையில் காயமடைந்து ஓய்வில் இருக்கிறார். இவரது மனைவி ரிவாபா. இவர், குஜராத் மாநிலம் ஜாம்நகர் வடக்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார்.
இந்திய அணிக்கு சிக்கல் மேல் சிக்கல் – ஷ்ரேயாஸ் ஐயரும் அவுட்?
இந்த நிலையில், தான் ரவீந்திர ஜடேஜாவின் தந்தை அனிருத்சிங், ஜடேஜாவின் மனைவி ரிவாபா மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது: கடந்த 2017 ஆம் ஆண்டு ரிவாபாவை திருமணம் செய்த ஜடேஜாவிற்கு தற்போது நித்யானா என்ற மகள் இருக்கிறாள். ரிவாபாவை திருமணம் செய்து கொண்ட 3 மாதத்திற்கு பிறகு எல்லா சொத்துக்களை தனது பெயரில் மாற்றிக் கொண்ட ரிவாபா, எங்களை பிரித்து வைத்துள்ளார்.
எனது பேத்தியைக் கூட பார்க்க முடியவில்லை. ஜடேஜாவை கிரிக்கெட் வீரராக்கியத்திற்கு வருத்தப்படுகிறேன். பணம் சம்பாதிக்க 20 லிட்டர் பால் கேன்களை தோளில் சுமந்து சென்றிருக்கிறேன். வாட்ச்மேன் வேலை செய்திருக்கிறேன். இப்படியெல்லாம் கடினமாக உழைத்து ஜடேஜாவை வளர்த்தோம். அவரை ரிவாபா உடன் திருமணம் செய்து வைக்காமலிருந்திருந்தால் எங்களது குடும்பம் நன்றாக இருந்திருக்கும்.
நானோ, எனது மகள் நைனாவோ தவறு செய்திருக்கலாம். ஆனால், எங்களது குடும்பத்தில் உள்ள 50 பேரும் எப்படி தவறு செய்திருக்க முடியும். கடந்த 5 ஆண்டுகளாக எங்களது பேத்தியை கூட பார்க்க முடியவில்லை. ஜடேஜா இருக்கும் ஜாம்நகர் பகுதியில் தான் நாங்களும் இருக்கிறோம். அவர்கள் பங்களா வீட்டில் வசிக்கிறார்கள். நாங்கள் தனியாக இருக்கிறோம்.
எதிஹாட் ஏர்வேஸ் என்று எழுதப்பட்ட சிஎஸ்கேயின் நியூ ஜெர்சி வெளியீடு; வைரலாகும் ஜெர்சி நம்பர் 7 வீடியோ!
இதற்கெல்லாம் ஜடேஜாவின் மாமியார் தான் காரணம். அவர் தான் எல்லா நிர்வாகமும். அவர்களுக்கு பணம் கொட்டி கிடப்பதால், இது போன்று செய்கிறார்கள் என்று குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து ரவீந்திர ஜடேஜாவோ தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். இது குறித்து ஜடேஜா குஜராத்தி மொழியில் தந்தையின் குற்றச்சாட்டிற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: எனது தந்தை அவதூறான கருத்துக்களை முன் வைத்துள்ளார். எனது மனைவியின் பெயருக்கு களங்கள் ஏற்படுத்தவே இது போன்று செய்கிறார். என்னாலயும் சொல்ல முடியும். ஆனால், நான் அவ்வாறு செய்யமாட்டேன் என்று கூறியுள்ளார்.