எதிஹாட் ஏர்வேஸ் என்று எழுதப்பட்ட சிஎஸ்கேயின் நியூ ஜெர்சி வெளியீடு; வைரலாகும் ஜெர்சி நம்பர் 7 வீடியோ!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ ஸ்பான்சராக இருக்கும் எதிஹாட் எர்வேஸ் நிறுவனத்தின் பெயர் அடங்கிய சிஎஸ்கே அணியின் புதிய ஜெர்சியானது வெளியிடப்பட்டுள்ளது.

Etihad Airways has joined as the official sponsor of the 5-time champions Chennai Super Kings and unveiled CSK New Jersey 2024 rsk

ஒவ்வொரு ஆண்டும் பிசிசிஐ மூலமாக ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசனில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது 5ஆவது முறையாக சாம்பியனானது. இதையடுத்து, 17ஆவது சீசன் வரும் மார்ச் மாதம் நடக்க இருக்கிறது.

தப்பா சொல்லிட்டேன், அந்தர்பல்டி அடித்த டிவிலியர்ஸ் – கோலி- அனுஷ்கா ஜோடி 2ஆவது குழந்தை கன்ஃபார்ம் இல்லையா?

இதற்கான அட்டவணை விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய ஜெர்சியானது நேற்று வெளியிடப்பட்டுள்ளது. இதில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டின் தேசிய ஏர்லைன் நிறுவனமான எதிஹாட் ஏர்வேஸ் 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாப்பூர்வ ஸ்பான்சராக இணைந்துள்ளது.

 

சென்னை ஓபன் சேலஞ்சர் டென்னிஸ் 2024 – இந்தியாவின் சுமித் நாகல் காலிறுதி சுற்றுக்கு முன்னேற்றம்!

இதனை அறிவிக்கும் விதமான நிகழ்ச்சி நேற்று சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நடந்தது. இதில், எதிஹாட் ஏர்வேஸ் நிறுவன அதிகாரிகள், சிஎஸ்கே அணி நிர்வாகத்தினர் கலந்து கொண்டனர். அதில், தோனியின் ஜெர்சி நம்பர் 7 கொண்ட சிஎஸ்கே ஜெர்சி வெளியிடப்பட்டது. அதில், ஜெர்சியின் பின்பக்கத்தில் எதிஹாட் ஏர்வேஸ் என்று எழுதப்பட்டிருந்தது. இந்த சீசனில் சிஎஸ்கே வீரர்கள் இது போன்ற ஜெர்சி அணிந்து தான் விளையாடுவார்கள்.எதிஹாட் ஏர்வேஸ் நிறுவனத்தின் பிராண்ட் அம்பாஸிடராக பாலிவுட் நடிகையான கத்ரீனா கைஃப் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ.14 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட டேரில் மிட்செல் – ஐபிஎல் தொடரிலிருந்து விலகல்?

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios