ஐபிஎல் தொடரில் கேப்டன்களுக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா? தோனிக்கு எல்லாம் சம்பளம் கம்மி தான், அவர் தான் டாப்!
ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு அணியைப் பொறுத்து கேப்டன்களின் சம்பளம் மாறுபடுகிறது. அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனான எம்.எஸ்.தோனிக்கு மட்டும் ரூ.12 கோடி சம்பளமாக வழங்கப்படுகிறது.
பிசிசிஐயின் மூலமாக இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் முறையாக ஐபிஎல் தொடர் நடத்தப்பட்டது. இதில், ராஜஸ்தான் அணி சாம்பியனானது. இதுவரையில் 16 சீசன்கள் நடத்தப்பட்டுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மட்டுமே தலா 5 முறை டிராபியை கைப்பற்றியுள்ளன. இந்த ஆண்டிற்கான 17ஆவது சீசன் வரும் மார்ச் மாதம் தொடங்க இருக்கிறது. ஆனால், எப்போது என்று தேதி அறிவிக்கப்படவில்லை. இந்த நிலையில் தான் தற்போது ஐபிஎல் தொடரில் கேப்டன்களுக்கு வழங்கப்படும் சம்பளம் குறித்த பட்டியல் வெளியாகியிருக்கிறது.
எதிஹாட் ஏர்வேஸ் என்று எழுதப்பட்ட சிஎஸ்கேயின் நியூ ஜெர்சி வெளியீடு; வைரலாகும் ஜெர்சி நம்பர் 7 வீடியோ!
அதன்படி பார்த்தால், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் கேப்டனான கேஎல் ராகுலுக்கு தான் அதிகபட்சமாக ரூ.17 கோடி வரையில் சம்பளம் கொடுக்கப்படுகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்ட்னான எம்.எஸ்.தோனிக்கு கூட ரூ.12 கோடி தான் சம்பளம் தரப்படுகிறது.
ரிஷப் பண்ட் (டெல்லி கேபிடல்ஸ்) – ரூ.16 கோடி
ஷ்ரேயாஸ் ஐயர் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்) – ரூ.12.25 கோடி
சஞ்சு சாம்சன் (ராஜஸ்தான் ராயல்ஸ்) – ரூ.14 கோடி
ஹர்திக் பாண்டியா (மும்பை இந்தியன்ஸ்) – ரூ.15 கோடி
எய்டன் மார்க்ரம் (சன்ரைசர்ஸ் ஹைதராபாத்) – ரூ.2.6 கோடி
ஷிகர் தவான் (பஞ்சாப் கிங்ஸ்) – ரூ.8.25 கோடி
சுப்மன் கில் (குஜராத் டைட்டன்ஸ்) – ரூ.8 கோடி
பாப் டூப்ளெசிஸ் (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு) – ரூ.7 கோடி
சென்னை ஓபன் சேலஞ்சர் டென்னிஸ் 2024 – இந்தியாவின் சுமித் நாகல் காலிறுதி சுற்றுக்கு முன்னேற்றம்!
கடந்த ஆண்டு நடந்த ஐபிஎல் ஏலத்திற்கு முன்னதாக வீரர்கள் டிரேடு முறையில் மாற்றப்பட்டனர். அதன்படி, ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியது. அப்போது, தன்னை கேப்டனாக்கினால் தான் அணிக்கு வருவேன் என்று ஹர்திக் பாண்டியா கண்டிஷன் போட்டதாக தகவல் வெளியாகியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ரூ.14 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட டேரில் மிட்செல் – ஐபிஎல் தொடரிலிருந்து விலகல்?