IND vs AUS:இந்திய அணியில் யாருக்கு இடம்? ருதுராஜ் கெய்க்வாட், திலக் வர்மா, வாஷிங்டன் சுந்தர் இடம் பெறுவார்களா?
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணியில் ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு வாய்ப்பு மறுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று பிற்பகல் 1.30 மணிக்கு மொஹாயில் நடக்க இருக்கிறது. இந்திய அணியில் முதல் 2 ஒருநாள் போட்டிகளுக்கு ரோகித் சர்மா, விராட் கோலி, ஹர்திக் பாண்டியா மற்றும் ஜஸ்ப்ரித் பும்ரா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது.
அதோடு, திலக் வர்மா, ரவிச்சந்திரன் அஸ்வின், சூர்யகுமார் யாதவ், ருதுராஜ் கெய்வாட் ஆகியோருக்கு இந்திய அணியில் வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்திய அணி வீரர்கள்: கேஎல் ராகுல் (கேப்டன், விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா (துணை கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், சுப்மன் கில், ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, இஷான் கிஷான், ஷர்துல் தாக்கூர், வாஷிங்டன் சுந்தர், ரவிச்சந்திரன் அஸ்வின், ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ், பிரஷித் கிருஷ்ணா.
ஏற்கனவே இந்திய அணி ஆசிய டிராபியை கைப்பற்றிய நிலையில், இன்றைய முதல் ஒரு நாள் போட்டியில் விளையாட இருக்கிறது. இந்தப் போட்டியில் ஐசிசி ஆண்கள் ஒருநாள் போட்டி பவுலர்களின் பட்டியலில் நம்பர் 1 இடத்தில் இருக்கும் முகமது சிராஜிற்கு இந்தப் போட்டியில் ஓய்வு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
CWC 2023: டுவிஸ்ட் மேல டுவிஸ்ட் கொடுக்கும் இலங்கை: அய்யா அவரு தான் கேப்டன்!
மேலும், முகமது ஷமி மற்றும் பிரஷித் கிருஷ்ணாவிற்கு இந்தப் போட்டியில் வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரோகித் சர்மாவிற்கு ஓய்வு அளிக்கப்பட்ட நிலையில், இஷான் கிஷான் மற்றும் சுப்மன் கில் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்க வாய்ப்பிருக்கிறது. ஷ்ரேயாஸ் ஐயர் 3ஆவது வரிசையிலும், சூர்யகுமார் யாதவ் 4ஆவது வரிசையிலும், கேஎல் ராகுல் 5ஆவது இடத்திலும், திலக் வர்மா அல்லது வாஷிங்டன் சுந்தர் 6ஆவது இடத்திலும் அதன் பிறகு ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், ரவிச்சந்திரன் அஸ்வின், ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது சிராஜ் அல்லது முகமது ஷமி ஆகியோர் களமிறங்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
இந்தியா பிளேயிங் 11:
சுப்மன் கில், இஷான் கிஷான், சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல் (கேப்டன், விக்கெட் கீப்பர்), திலக் வர்மா அல்லது வாஷிங்டன் சுந்தர், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், ரவிச்சந்திரன் அஸ்வின், ஜஸ்ப்ரித் பும்ரா மற்றும் முகமது சிராஜ்
இப்படியொரு முன்னேற்றமா? எல்லாம் ஆசிய கோப்பை ஃபைனல் செய்த வேலை: நம்பர் 1 இடத்தில் முகமது சிராஜ்!