CWC 2023: டுவிஸ்ட் மேல டுவிஸ்ட் கொடுக்கும் இலங்கை: அய்யா அவரு தான் கேப்டன்!
ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை 2023 முடியும் வரையில் இலங்கை அணியின் கேப்டனாக தசுன் ஷனாகா தொடர்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் கடந்த ஆகஸ்ட் 30 ஆம் தேதி முதல் செப்டம்பர் 17ஆம் தேதி வரையில் நடந்தது. இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் மற்றும் நேபாள் என்று 6 அணிகள் இடம் பெற்ற இந்த தொடரில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் இறுதிப் போட்டியில் விளையாடின. இதில், டாஸ் வென்ற இலங்கை கேப்டன் தசுன் ஷனாகா பேட்டிங் தேர்வு செய்தார்.
அதன்படி இலங்கை அணியில் தொடக்க வீரர்களாக பதும் நிஷாங்கா மற்றும் குசால் பேரேரா இருவரும் களமிறங்கினர். இதில், பெரேரா டக் அவுட்டில் வெளியேறினார். அடுத்து வந்த டாப் பேட்ஸ்மேன்கள், முகமது சிராஜ் ஓவரில் ஆட்டமிழந்தனர். சிராஜ் மட்டுமே 6 விக்கெட்டுகள் கைப்பற்ற ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்டுகள் எடுத்தார். இறுதியாக இலங்கை, 50 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
பின்னர் ஆடிய இந்தியா 51 ரன்கள் எடுத்து வெற்றி பெற்று 8ஆவது முறையாக ஆசிய கோப்பை சாம்பியனானது. இந்த நிலையில், அடுத்த மாதம் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடங்க உள்ள நிலையில், இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனாகா தனது கேப்டன் பொறுப்பிலிருந்து விலக உள்ளதாக தகவல் வெளியானது.
ஆனால், ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைக்கு இன்னும் 2 வாரங்களே உள்ள நிலையில், கேப்டனை மாற்றினால் அது நன்றாக இருக்காது என்று கருதிய தேர்வுக்கு உலகக் கோப்பை முடியும் வரையில் ஷனாகா கேப்டனாக தொடர்வார் என்று அறிவித்துள்ளது. மேலும், உலகக் கோப்பைக்கான இலங்கை அணி இதுவரையில் அறிவிக்கப்படவில்லை. அதற்கு முக்கிய காரணம், இலங்கை அணியில் கீ பிளேயர்ஸ்களான வணிந்து ஹசரங்கா, துஷ்மந்தா சமீரா, லகிரு மதுஷங்கா மற்றும் லகிரு குமாரா ஆகியோர் காயம் அடைந்துள்ளனர்.
ஆகையால் இவர்கள் யாரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இடம் பெறவில்லை. இதில், மஹீஷ் தீக்ஷனா ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் போது காயம் அடைந்தார். எனினும், அவர்கள் உடல் நிலை குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. ஆகையால், இலங்கை அணி அவர்களுக்காக காத்துக்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
இப்படியொரு முன்னேற்றமா? எல்லாம் ஆசிய கோப்பை ஃபைனல் செய்த வேலை: நம்பர் 1 இடத்தில் முகமது சிராஜ்!
ஒரு கேப்டனாக ஷனாகா 39 போட்டிகளில் விளையாடி 23 போட்டியில் வெற்றியும், 15 போட்டியில் தோல்வியும் கண்டுள்ளார். ஒரு வீரராக 28 போட்டிகளில் விளையாடி 7ல் வெற்றியும், 6ல் தோல்வியும் கண்டுள்ளது. இலங்கை அணியில் ஷனாகா அறிமுகமானதிலிருந்து ஷனாகாவுடன் இணைந்து 67 போட்டிகளில் விளையாடி 30ல் வெற்றியும், 31ல் தோல்வியும் அடைந்துள்ளது.
ஆனால், ஷனாகா இல்லாமல் 68 போட்டிகளில் விளையாடி 21ல் வெற்றியும், 46ல் தோல்வியும் அடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் உலகக் கோப்பையிலேயே துப்பாக்கி சுடுதலில் வெள்ளிப் பதக்கம்: தேசிய சாதனை படைத்த இந்திய வீராங்கனை!