பேட் பிடித்த கையில் விநாயகருக்கு தீபாராதனை காட்டிய ரோகித் சர்மா; விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய கிரிக்கெட்டர்கள்
ஆசிய கோப்பையில் 8ஆவது முறையாக டிராபியை கைப்பற்றிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா சிறப்பாக விநாயகர் சதுர்த்தியை கொண்டாடி மகிழ்ந்துள்ளார்.
இந்தியா முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், தமிழகத்தைக் காட்டிலும் வட மாநிலங்களில் அதுவும் மும்பையில் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதில், முகேஷ் அம்பானி மும்பையில் உள்ள அண்டிலியாவில் தனது வீட்டில் விநாயகர் சதுர்த்தியை சிறப்பாக கொண்டாடியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் சினிமா பிரபலங்கள், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் உள்ளிட்ட கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
இலங்கையில் கொழும்புவில் 16ஆவது எடிஷனுக்கான ஆசிய கோப்பை 2023 இறுதிப் போட்டி கடந்த 17ஆம் தேதி நடந்தது. இதில், இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதின. இந்தப் போட்டியில் முகமது சிராஜின் வேகத்தில் சிக்கிய இலங்கை 6 விக்கெட்டுகளை இழந்தது. அடுத்து ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்டுகள் எடுக்க இலங்கை 50 ரன்கள் மட்டுமே எடுத்தது.
பின்னர் இந்தியா 51 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 8ஆவது முறையாக ஆசிய கோப்பை டிராபியை டீம் இந்தியா கைப்பற்றியது. இதில், ரோகித் சர்மா தனது கேப்டன்ஷியில் 2ஆவது முறையாக ஆசிய கோப்பையை கைப்பற்றியிருக்கிறார்.
CWC 2023: டுவிஸ்ட் மேல டுவிஸ்ட் கொடுக்கும் இலங்கை: அய்யா அவரு தான் கேப்டன்!
இந்த நிலையில் தான் 18ஆம் தேதி மும்பை திரும்பிய கிரிக்கெட் வீரர்கள் 19 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியை தங்களது வீடுகளில் சிறப்பாக கொண்டாடியுள்ளனர். இதில், ரோகித் சர்மா வீட்டில் விநாயகர் வைத்து சிறப்பு பூஜைகள் செய்து உலகக் கோப்பைக்காக வேண்டிக் கொண்டுள்ளனர். எப்படியாவது இந்த முறை இந்தியா கைப்பற்ற வேண்டும் என்று கிரிக்கெட் வீரர்கள் பலரும் விநாயகரிடம் வேண்டிக் கொண்டிருக்கின்றனர்.
கிரிக்கெட் வீரர்கள் மட்டுமின்றி கிரிக்கெட் ரசிகர்களும் கூட இந்த முறை இந்தியா உலகக் கோப்பை டிராபியை கைப்பற்ற வேண்டும் என்று வேண்டிக் கொண்டுள்ளனர். ரோகித் சர்மா மட்டுமின்றி விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், திலக் வர்மா, ஷிகர் தவான், மாயங்க் அகர்வால், சச்சின் டெண்டுல்கர், சூர்யகுமார் யாதவ், கேஎல் ராகுல் ஆகியோர் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடியுள்ளனர்.
இப்படியொரு முன்னேற்றமா? எல்லாம் ஆசிய கோப்பை ஃபைனல் செய்த வேலை: நம்பர் 1 இடத்தில் முகமது சிராஜ்!
உலகக் கோப்பை 2023 தொடருக்கு முன்னதாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி பங்கேற்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணி கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. இதில், முதல் 2 ஒருநாள் போட்டிகளில் ரோகித் சர்மா, விராட் கோலி, ஜஸ்ப்ரித் பும்ரா, ஹர்திக் பாண்டியா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நாளை மொஹாலியில் நடக்க இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.