நியூசிலாந்திற்கு எதிராக டீம் இந்தியா இந்த தவறை மட்டும் செய்யாமல் இருந்தால் வெற்றி பெற வாய்ப்பு!
நியூசிலாந்து அணிக்கு எதிரான லீக் போட்டியில் இந்திய அணி வீரர்கள் பீல்டிங்கிலும், கேட்சிலும் கோட்டைவிட்டனர்.
இந்தியாவில் நடந்து வந்த 13 ஆவது கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் இன்னும் 3 போட்டிகளுடன் முடிகிறது. உலகக் கோப்பை கிர்க்கெட் தொடரின் முதல் அரையிறுதிப் போட்டி இன்று பிற்பகல் 2 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கிறது. இதில், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் இந்திய அணியானது மீண்டும் இது போன்ற தவறுகளை செய்யாமல் இருந்தால் வெற்றி பெறலாம்.
இந்த உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிய 21 ஆவது லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 273 ரன்கள் குவித்தது. இந்தப் போட்டியில் டேரில் மிட்செல் 130 ரன்கள் குவித்தார். அவர் 60 ரன்கள் எடுத்திருந்த போது கொடுத்த கேட்ச் வாய்ப்பை விக்கெட் கீப்பர் கேஎல் ராகுல் கோட்டைவிட்டார். மேலும், டேரில் மிட்செலுக்கு பும்ராவும் ஒரு கேட்சை கோட்டைவிட்டார்.
இதே போன்று, முகமது ஷமி வீசிய ஓவரில் ரச்சின் ரவீந்திரா கொடுத்த கேட்ச் வாய்ப்பை ரவீந்திரா ஜடேஜா கோட்டைவிட்டார். பீல்டிங்கும் கொஞ்சம் மந்தமாகவே இருந்தது. இதையெல்லாம் இன்று நடக்கும் முதல் அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி செய்யாமல் இருந்தால் இன்றைய போட்டியில் வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது.