தப்பி தவறி எனது வாயில் வந்துவிட்டது, எந்த உள்நோக்கமும் இல்லை; ஐஸ்வர்யா ராயிடம் மன்னிப்பு கேட்ட அப்துல் ரசாக்!
கிர்க்கெட், பயிற்சியாளர் குறித்து விமர்சிக்கும் போது அதில் உங்களது பெயரும் தப்பி தவறி எனது வாயில் வந்துவிட்டது. இதில் எந்த உள்நோக்கமும் இல்லை என்று கூறி பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட்டர் அப்துல் ரசாக் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார்.
இந்தியாவில் நடந்து வந்த 13ஆவது கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இடம் பெற்ற பாகிஸ்தான் விளையாடிய 9 போட்டிகளில் 4ல் மட்டுமே வெற்றி பெற்று 5 போட்டிகளில் தோல்வி அடைந்தது. கடைசியாக கிடத்த அரையிறுதி வாய்ப்பையும், இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் கோட்டைவிட்டு பரிதாபமாக வெளியேறியது.
இந்த நிலையில் தான் இது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல் ரவுண்டரான அப்துல் ரசாக்கிடம் செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து விளக்கமளித்த அப்துல் ரசாக் கூறியிருப்பதாவது: பாகிஸ்தானில் வீரர்களை உருவாக்கி அவர்களை மெருகூட்ட வேண்டும் என்ற நல்ல எண்ணம் எல்லாம் எங்களுக்கு இல்லை. ஐஸ்வர்யா ராயை திருமணம் செய்து கொண்டால், நல்ல மற்றும் பக்தியுள்ள குழந்தை பிறக்கும் என்று நீங்கள் நினைத்தால், அது மட்டும் நடக்காது என்று பேசியுள்ளார்.
இதையடுத்து அருகிலிருந்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர்களான ஷாகித் அஃப்ரிடி மற்றும் உமர் கில் இருவரும் கை தட்டி பாராட்டு தெரிவித்ததோடு, சிரிக்கவும் செய்தனர். இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த நிலையில் இது தொடர்பாக பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராயிடம் தனிப்பட்ட முறையில் அப்துல் ரசாக் மன்னிப்பு கேட்டுள்ள வீடியோ ஒன்று வைரலாகிறது.
இதில், அவர் கூறியிருப்பதாவது: கிரிக்கெட், பயிற்சியாளர், ரிஸ்வான் குறித்து விமர்சிக்கையில் தப்பி தவறி உங்களது பெயரும் எனது வாயில் வந்துவிட்டது. இதில் எந்த உள்நோக்கமும் இல்லை. யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கமும் இல்லை என்று கூறியுள்ளார். எனினும், இது சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஐபிஎல் போன்று மழை பெய்தால் என்ன செய்வது? அரையிறுதி, இறுதிப் போட்டிக்கு ரிசர்வ் டே அறிவிப்பு!
Credit Goes to Wajahat Kazmi