சச்சின் டெண்டுல்கரின் 50ஆவது பிறந்தநாளை முன்னிட்டு ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி கிரிக்கெட் மைதானத்தின் கேட்டிற்கு சச்சின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. 

கிரிக்கெட் உலகின் கடவுள் என்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் இன்று தனது 50ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். தற்போது கோவாவில் உள்ள சச்சின் தனது டுவிட்டர் பக்கத்தில் டீ டைம்; 50 நாட் அவுட் என்று பதிவிட்டுள்ளார். சச்சின் டெண்டுல்கரின் 50ஆவது பிறந்தநாளை முன்னிட்டு கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

IPL 2023: அஸ்வின் அவுட்டானதைப் பார்த்து கண்ணீர் விட்டு அழுத அவரது மகள்!

இந்த நிலையில், ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி கிரிக்கெட் மைதானம் சச்சின் டெண்டுல்கரின் 50ஆவது பிறந்தநாளை முன்னிட்டு சிட்னி கிரிக்கெட் மைதானத்தின் கேட்டிற்கு வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரர் பிரையன் லாரா - சச்சின் டெண்டுல்கரின் பெயரை சூட்டி அவர்களை கௌரவித்துள்ளது. இந்த கேட்டை கடந்து தான் மைதானத்திற்குள் விசிட்டிங் அணியின் வீரர்கள் உள்ளே செல்ல முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓபனா சொல்லாமல், நாசுக்காக சொன்ன எம்.எஸ்.தோனி; எப்படியாவது டிராபியை கைப்பற்ற போராடும் சிஎஸ்கே!

கடந்த 1993 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பிரையன் லாரா தனது முதல் டெஸ்ட் சதத்தை பூர்த்தி செய்தார். சச்சின் விளையாடிய 200 போட்டிகளில் 5 போட்டிகள் சிட்னி மைதானத்தில் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார். சிட்னி மைதானத்தில் அதிகபட்சமாக 241 ரன்கள் குவித்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்துள்ளார். இதே போன்று லாராவும் சிட்னியில் 4 போட்டிகளில் விளையாடியுள்ளார். அதிகபட்சமாக 277 ரன்கள் குவித்துள்ளார்.

சச்சினின் 200ஆவது டெஸ்ட்: தபால் தலை வெளியிட்டு கௌரவப்படுத்திய இந்திய அஞ்சல் துறை!

Scroll to load tweet…

கிரிக்கெட்டின் கடவுள், சாதனை நாயகன் சச்சினின் 50ஆவது பிறந்தநாள் இன்று!

Scroll to load tweet…