IPL 2023: அஸ்வின் அவுட்டானதைப் பார்த்து கண்ணீர் விட்டு அழுத அவரது மகள்!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் அவுட்டானதைப் பார்த்து அவரது மகள் கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.
ரவிச்சந்திரன் அஸ்வின்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான 32ஆவது போட்டி நேற்று பெங்களூருவில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் ஆடிய ஆர்சிபி அணியின் தொடக்க வீரர் விராட் கோலி டக் அவுட்டானாலும், அதன்பின்னர் டுப்ளெசிஸ் மற்றும் மேக்ஸ்வெல் ஆகிய இருவரும் இணைந்து அதிரடியாக பேட்டிங் ஆடி இருவருமே அரைசதம் அடித்து 3வது விக்கெட்டுக்கு 117 ரன்களை குவித்தனர்.
ரவிச்சந்திரன் அஸ்வின்
டுப்ளெசிஸ் 39 பந்தில் 8 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 62 ரன்கள் அடித்து ஆட்டமிழக்க, மேக்ஸ்வெல் 44 பந்தில் 6 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 77 ரன்களை குவித்து 15வது ஓவரில் ஆட்டமிழந்தார். மேக்ஸ்வெல் ஆட்டமிழந்த பின் கடைசி 5 ஓவரில் ஆர்சிபி 33 ரன்கள் மட்டுமே அடித்ததால் ஆர்சிபியால் 200 ரன்களை எட்டமுடியாமல் 189 ரன்கள் தான் அடித்தது.
ரவிச்சந்திரன் அஸ்வின்
190 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் பட்லர் டக் அவுட்டாகி ஏமாற்றமளித்தார். ஆனால் யஷஸ்வி ஜெய்ஸ்வாலும் தேவ்தத் படிக்கல்லும் இணைந்து அதிரடியாக ஆடி 2வது விக்கெட்டுக்கு 98 ரன்களை குவித்தனர். அதிரடியாக ஆடி அரைசதம் அடித்த தேவ்தத் படிக்கல் 34 பந்தில் 52 ரன்கள் அடித்து ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து யஷஸ்வி ஜெய்ஸ்வால் 47 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
ரவிச்சந்திரன் அஸ்வின்
அதன்பின்னர் கேப்டன் சஞ்சு சாம்சன் 22 ரன்களுக்கும், ஷிம்ரான் ஹெட்மயர் 3 ரன்களுக்கும் ஆட்டமிழக்க, ஆட்டம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கையை விட்டுச்சென்றது. கடைசியாக வந்த அஸ்வின் நின்றிருந்தாலும் கூட ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஜெயிச்சிருக்கும். ஆனால், அவர் சிக்ஸர் அடிக்கிறேன் என்ற பேரில், ஸ்லோ பந்தை அடிக்க முயற்சித்து ஆட்டமிழந்து வெளியேறினார். அவர் அவுட்டானதைப் பார்த்து அவரது மகள் கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.
ரவிச்சந்திரன் அஸ்வின்
அதன்பின்னர் துருவ் ஜூரெல் 16 பந்தில் 2 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 34 ரன்கள் அடித்து கடைசிவரை களத்தில் நின்றாலும் கூட, அவரால் இலக்கை எட்ட முடியவில்லை. கடைசி ஓவரில் 20 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், அந்த ஓவரில் 12 ரன்கள் மட்டுமே அடித்து 7 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.
ரவிச்சந்திரன் அஸ்வின்
அதோடு புள்ளிப்பட்டியலில் நம்பர் ஒன் இடத்தில் இருந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நேற்றைய போட்டியில் தோற்றதன் மூலமாக 2ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. வரும் 25ஆம் தேதி தனது கோட்டையான ஜெய்ப்பூரில் நடக்கும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது. ஏற்கனவே சென்னையில் நடந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை, 3 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.