கிரிக்கெட்டின் கடவுள், சாதனை நாயகன் சச்சினின் 50ஆவது பிறந்தநாள் இன்று!
கிரிக்கெட் உலகின் கடவுள், மாஸ்டர் பிளாஸ்டர் என்று போற்றப்படும் சச்சின் இன்று தனது 50ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
சச்சின் டெண்டுல்கர் 50ஆவது பிறந்த நாள்
கடந்த 1973 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் தேதி மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பிறந்தவர் சச்சின் டெண்டுல்கர். லிட்டில் மாஸ்டர், மாஸ்டர் பிளாஸ்டர் என்றும் அழைக்கப்படுகிறார். சச்சினின் தந்தை ரமேஷ் மராத்தி மொழி நாவலாசிரியர் மற்றும் கவிஞர்.
சச்சின் டெண்டுல்கர் 50ஆவது பிறந்த நாள்
தாய், ரஜினி இன்சூரன்ஸ் துறையில் பணிபுரிந்தார். சிறு வயது முதலே டென்னிஸ் மற்றும் கிரிக்கெட் விளையாடுவதில் ஆர்வம் கொண்டிருந்தார். கடந்த 1984 ஆம் ஆண்டு சாராதா ஆஸிரமத்திற்கு சென்ற பிற்கு சச்சின் கிரிக்கெட் விளையாட தொடங்கியுள்ளார். அச்ரேக்கர் அவருக்கு கிரிக்கெட் விளையாட பயிற்சி கொடுத்துள்ளார்.
சச்சின் டெண்டுல்கர் 50ஆவது பிறந்த நாள்
ஆரம்பத்தில் ஸ்டெம்பின் மீது ஒரு ரூபாய் நாணயத்தை வைத்து கச்சிதமாக பந்து வீசி ஸ்டெம்பை விழ வைத்துவிட்டால் அந்த நாணயத்தை எடுத்துக் கொள்ளலாம். அப்படி அவர் 13 முறை வெற்றி பெற்றிருக்கிறார். 1984ல், 11 வயதில், ஜான் பிரைட் கிரிக்கெட் கிளப்பில் விளையாடும் போது கங்கா கிரிக்கெட் லீக்கில் அறிமுகமானார்.
சச்சின் டெண்டுல்கர் 50ஆவது பிறந்த நாள்
தனது 14ஆவது வயதில் MRF பேஸ் அறக்கட்டளையில் சேர்ந்து வேகப்பந்து வீச்சாளராக பயிற்சி மேற்கொண்டார். ஆனால், அதில் அவரது பயிற்சியில் எந்த முன்னேற்றமும் இல்லாத நிலையில் அவரை பேட்டிங் பயிற்சி எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளார்.
சச்சின் டெண்டுல்கர் 50ஆவது பிறந்த நாள்
கடந்த 1987 ஆம் ஆண்டு ஜனவரி 20 ஆம் தேதி இம்ரான் கானுக்கு பதிலாக சப்ஸ்டிட்டியூட்டாக பிரபோர்ன் மைதானத்தில் நடந்த கண்காட்சி போட்டியில் கலந்து கொண்டார். அதன் பிறகு ஒரு சில மாதங்களுக்கு பிறகு முன்னாள் இந்திய பேட்ஸ்மேன் சுனில் கவாஸ்கர், டெண்டுல்கருக்கு ஒரு ஜோடி லைட்வெயிட் பேடுகளைக் கொடுத்து, மும்பை கிரிக்கெட் சங்கத்தின் சிறந்த ஜூனியர் கிரிக்கெட் வீரர் விருதைப் பெறாததற்காக வருத்தப்பட வேண்டாம் என்று கூறினார்.
சச்சின் டெண்டுல்கர் 50ஆவது பிறந்த நாள்
கடந்த 1987 ஆம் ஆண்டு மும்பையில் நடந்த உலகக் கோப்பை அரையிறுதியில் இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா விளையாடிய போது டெண்டுல்கர் பந்து வீச்சாளராக விளையாடினார். கடந்த 1988 ஆம் ஆண்டு, சாரதாஷ்ரமத்திற்காக விளையாடும்போது, செயின்ட் சேவியர்ஸ் உயர்நிலைப் பள்ளிக்கு எதிரான லார்ட் ஹாரிஸ் ஷீல்டு பள்ளிகளுக்கு இடையேயான ஆட்டத்தில் டெண்டுல்கரும், வினோத் காம்ப்லியும் இணைந்து 664 ரன்கள் எடுத்தனர். இதில் டெண்டுல்கர் 326 (நாட் அவுட்) ரன்கள் எடுத்தார். அதுமட்டுமின்றி இந்தப் போட்டியில் 1,000 ரன்களுக்கு மேல் அடித்தார்.
சச்சின் டெண்டுல்கர் 50ஆவது பிறந்த நாள்
அதன் பிறகு தான் சச்சின் டெண்டுல்கர் தனது 14ஆவது வயதில் ரஞ்சி டிராபி தொடரில் அறிமுகமானார். ஆனால், 1987-88 ஆம் ஆண்டுகளில் அவர் ரஞ்சி டிராபியில் 11 பேர் கொண்ட மும்பை அணியில் இடம் பெறவில்லை. மாறாக சப்ஸ்டிடியூட் வீரராக மட்டுமே கலந்து கொண்டார்.
சச்சின் டெண்டுல்கர் 50ஆவது பிறந்த நாள்
அஹன் பிறகு தனது 15ஆவது வயதில் குஜராத் அணிக்கு எதிரான ரஞ்சி டிராபியில் விளையாடினார். அதுமட்டுமின்றி இந்தப் போட்டியில் இளம் வீரராக அறிமுகமான முதல் போட்டியிலேயே 100 ரன்கள் எடுத்து சாதனை படைத்து கடைசி வரை களத்தில் இருந்தார்.
சச்சின் டெண்டுல்கர் 50ஆவது பிறந்த நாள்
இதையடுத்து மும்பை அணிக்கு கேப்டனானார். இந்த சீசனில் அதிக ரன்கள் குவித்த 8 ஆவது வீரர் என்ற சாதனையை சச்சின் படைத்தார். அதன் பிறகு இராணி டிராபி, தியோதர் டிராபி, திலீப் டிராபியில் விளையாடி கடைசியாக தனது திறமையின் மூலமாக இந்திய அணியில் இடம் பெற்றார்.
சச்சின் டெண்டுல்கர் 50ஆவது பிறந்த நாள்
சர்வதேச கிரிக்கெட்டில் 34,000க்கும் அதிகமாக ரன்கள் சேர்த்துள்ளார். ஆனால், ஒரேயொரு டி20 போட்டியில் மட்டுமே சச்சின் விளையாடியுள்ளார். முதல் முறையாக பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூலமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் சச்சின் அறிமுகமானார்.
சச்சின் டெண்டுல்கர் 50ஆவது பிறந்த நாள்
கடந்த 1989 ஆம் ஆண்டு நவம்பர் 15 ஆம் தேதி அறிமுகமான சச்சின் 200 டெஸ்ட் போட்டிகளில் 329 இன்னிங்ஸில் 15921 ரன்கள் எடுத்துள்ளார். அதிகபட்சமாக 248 ரன்கள் சேர்த்தார். கடந்த 2013 ஆம் ஆண்டு நவம்பர் 14 ஆம் தேதி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடினார். அதன் பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார்.
சச்சின் டெண்டுல்கர் 50ஆவது பிறந்த நாள்
கடந்த 2013 ஆம் ஆண்டு சச்சினின் 200ஆவது டெஸ்ட் நினைவாக, அவரை கவுரவிக்கும் வகையில் இந்திய அஞ்சல் துறை சார்பில் சிறப்பு தபால் தலை மற்றும் சிறப்பு மினியேச்சர்கள் வெளியிடப்பட்டது. அன்னை தெரசாவிற்குப் பிறகு சச்சின் டெண்டுல்கர் இந்த சாதனையை பெற்றார்.
சச்சின் டெண்டுல்கர் 50ஆவது பிறந்த நாள்
இதே போன்று 1989 ஆம் ஆண்டு டிசம்பர் 18 ஆம் தேதி பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் அறிமுகமானார். இதில், 463 போட்டிகளில் 452 இன்னிங்ஸ் விளையாடி 18426 ரன்கள் சேர்த்துள்ளார். 2012 ஆம் ஆண்டு மார்ச் 18 ஆம் தேதி நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு நாள் போட்டியுடன் ஒரு நாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். இதுவரையில் சச்சின் அடித்த 100 சதங்கள் சாதனையை இதுவரையில் யாரும் முறியடிக்கவில்லை.
சச்சின் டெண்டுல்கர் 50ஆவது பிறந்த நாள்
ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்று விளையாடி வந்த சச்சின் 2013 ஆம் ஆண்டு மே 13 ஆம் தேதி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் கடைசியாக விளையாடினார். இதுவரையில் 78 போட்டிகளில் விளையாடியுள்ள சச்சின் டெண்டுல்கர் 2334 ரன்கள் எடுத்துள்ளார்.