உலகின் சிறந்த டி20 கிரிக்கெட்டர் என்ற விஸ்டன் விருது வென்ற மிஸ்டர் 360 டிகிரி!
டி20 கிரிக்கெட்டில் நம்பர் ஒன் வீரராக திகழும் மிஸ்டர் 360 டிகிரி என்று அழைக்கப்படும் சூர்யகுமார் யாதவிற்கு உலகின் சிறந்த டி20 கிரிக்கெட்டர் என்ற விருதை விஸ்டன் அறிவித்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும், கிரிக்கெட்டில் சிறந்து விளங்கும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு ஐசிசி விருது வழங்கி கௌரவித்து வருகிறது. அதே போன்று, லண்டனில் உள்ள பழமை வாய்ந்த விஸ்டன் கிரிக்கெட்டர்ஸ் அல்மனக் பத்திரிக்கை நிறுவனமும் கிரிக்கெட்டில் சிறந்து விளங்கும் வீரர்கள், வீராங்கனைகளுக்கு விருது வழங்கி கௌரவித்து வருகிறது. அந்த வகையில் 2023 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் சிறந்து விளங்கும் வீரர்கள், வீராங்கனைகளை தேர்வு செய்து அவர்களுக்கு விஸ்டன் விருது வழங்கி பாராட்டி கௌரவித்துள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி; இந்தியாவுக்கு டஃப் கொடுக்க ரெடியான ஆஸி அணி அறிவிப்பு!
அந்த விருது பட்டியலில் 2023ஆம் ஆண்டின் சிறந்த கிரிக்கெட்டர்ஸ் விருது 4 வீரர்கள் மற்றும் ஒரு வீராங்கனைக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதிலேயும், மகளிர் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டு இந்திய அணியை வழி நடத்தும் ஹர்மன்ப்ரீத் கவுருக்கு இந்த விஸ்டன் விருதுக்கு தேர்வு செய்துள்ளது. இதன் மூலமாக விஸ்டன் விருது வெல்லும் முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாற்று சாதனையையும் ஹர்மன்ப்ரீத் கவுர் படைத்துள்ளார். மிதாலி ராஜ், ஜூலன் கோஸ்வாமி கூட இந்த விருதை வென்றதில்லை.
IPL 2023: பாப் டூப்ளெசிஸியின் Fazl டாட்டுவிற்கான அர்த்தம் என்னவென்று தெரியுமா?
இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ், மேத்யூ போட்ஸ், நியூசிலாந்தின் டாம் ப்ளண்ட்ஸ், டார்ல் மிட்செல் ஆகியோரும் இந்த விருதை வென்றுள்ளனர். அதே போன்று கடந்த ஆண்டில் டி20 கிரிக்கெட்டில் 2 சதங்கள், 9 அரைசதங்கள் உள்பட 1164 ரன்கள் எடுத்து இந்தியாவின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த மிஸ்டர் 360 டிகிரி என்று அழைக்கப்படும் சூர்யகுமார் யாதவ்விற்கு உலகின் சிறந்த டி20 கிரிக்கெட்டர் என்ற விஸ்டன் விருது அறிவிக்கபட்டுள்ளது. குறுகிய காலத்திலேயே உலகின் டி20 போட்டிகளில் நம்பர் ஒன் வீரராக வெற்றிக் கொடி நாட்டியுள்ளார்.
IPL 2023: ஹைதராபாத்தில் நடந்த போட்டிகளில் 31ல் சன்ரைசர்ஸ் வெற்றி; இன்றைய போட்டி யாருக்கு சாதகம்?
இதற்கு முன் இந்த விருதை விராட் கோலி 3 முறை வென்றுள்ளார். இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் விராட் கோலியின் இந்த சாதனையை சமன் செய்துள்ளார். மேலும், இங்கிலாந்தின் மற்றொரு வீரர் ஜானி பேர்ஸ்டோவும் விஸ்டன் விருது வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.