உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி; இந்தியாவுக்கு டஃப் கொடுக்க ரெடியான ஆஸி அணி அறிவிப்பு!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான 17 பேர் கொண்ட ஆஸ்திரேலியா அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியா டெஸ்ட் அணி
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலியா 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில், 3ஆவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முதல் அணியாக தகுதி பெற்றது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி
இதையடுத்து, இலங்கை மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியை இந்தியா நம்பியிருந்தது. இதில், இலங்கை அணி தோல்வியடையவே இந்தியாவின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி கனவு நிறைவேறியது.
ஆஸ்திரேலியா டெஸ்ட் அணி
இதன் மூலமாக 20 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் மோதுகின்றன. இந்தப் போட்டி வரும் ஜூன் 7 ஆம் தேதி இங்கிலாந்தின் தலைநகரான லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி
இதற்கு முன்னதாக கடந்த 2003 ஆம் ஆண்டு ரிக்கி பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலியா அணி இந்தியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியாவை 125 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.
ஆஸ்திரேலியா டெஸ்ட் அணி
கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு பிறகு பழி தீர்க்க இந்திய அணிக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. இரண்டாவது முறையாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்தியா இந்த முறை தனது வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு உலக டெஸ்ட் சாம்பியன் பட்டத்தை தட்டிச் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி
இந்த நிலையில், இந்தியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான 17 பேர் கொண்ட ஆஸ்திரேலியா அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், தனது தாயார் காலமான நிலையில், இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து பாதியிலேயே வெளியேறிய பாட் கம்மின்ஸ் மீண்டும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலியா டெஸ்ட் அணி
அவருக்குப் பதிலாக ஆஸி., டெஸ்ட் அணிக்கு கேப்டனாக இருந்து 3 ஆவது போட்டியில் வெற்றி பெற்றுக் கொடுத்த ஸ்டீவ் ஸ்மித் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி
டேவிட் வார்னரும் அணிக்கு திரும்பியுள்ளார். சிறந்த ஆல்ரவுண்டர்களான கேமரூன் க்ரீன் மற்றும் மிட்செல் மார்ஷ் ஆகியோருக்கும் அணியில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியா டெஸ்ட் அணி
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சிறப்பாக பந்து வீசிய முர்ஃபியும் அணியில் இடம் பெற்றுள்ளார். அவர் நாதன் லயானுக்கு பக்க பலமாக இருப்பார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி
இவர்கள் தவிர, பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஜாஸ் ஹசல்வுட் மற்றும் போலாண்ட் ஆகியோர் இந்தியாவிற்கு சவாலாக இருப்பார்கள். தற்போது 17 வீரர்கள் இடம் பெற்றுள்ள நிலையில், இறுதியில் 2 வீரர்கள் நீக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியா டெஸ்ட் அணி
பாட் கம்மின்ஸ் (கேப்டன்), ஸ்டீவ் ஸ்மித் (துணை கேப்டன்), டிராவிஸ் ஹெட், மார்னஸ் லபுஷேன், டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, மேத்தீவ் ரென்ஷா, மார்கஸ் ஹாரிஸ், மிட்செல் மார்ஷ், கேமரூன் க்ரீன், அலெக்ஸ் கேரி, ஜோஸ் இங்கிலிஸ், நாதன் லயான், டாட் முர்ஃபி, மிட்செல் ஸ்டார்க், ஜாஸ் ஹாசல்வுட், ஸ்காட் போலாண்ட்