MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • IPL 2023: ஹைதராபாத்தில் நடந்த போட்டிகளில் 31ல் சன்ரைசர்ஸ் வெற்றி; இன்றைய போட்டி யாருக்கு சாதகம்?

IPL 2023: ஹைதராபாத்தில் நடந்த போட்டிகளில் 31ல் சன்ரைசர்ஸ் வெற்றி; இன்றைய போட்டி யாருக்கு சாதகம்?

IPL 2023: ஹைதராபாத்தில் நடந்த போட்டிகளில் 31ல் சன்ரைசர்ஸ் வெற்றி; இன்றைய போட்டி யாருக்கு சாதகம்?

2 Min read
Author : Rsiva kumar
Published : Apr 18 2023, 03:27 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

ஐபிஎல் 2023 கிரிக்கெட் திருவிழா விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஒவ்வொரு அணியும் தங்களது வெற்றிக்கணக்கை தொடங்கிய நிலையில், டெல்லி அணி மட்டும் இன்னும் வெற்றி பெறவில்லை. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
210
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

ஏற்கனவே தனது வெற்றியை தொடங்கிய மும்பை இந்தியன்ஸ் தற்போது ஹாட்ரிக் வெற்றிக்காக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நடக்கிறது.

310
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

இரு அணிகளும் 4 போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளில் வெற்றி கண்டுள்ளன. ஐபிஎல் 2023 புள்ளிப் பட்டியலில் மும்பை இந்தியன்ஸ் அணி 8 ஆவது இடத்திலும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 9ஆவது இடத்திலும் உள்ளது. 

410
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

இதுவரையில் ஹோம் மைதானங்களில் நடந்த போட்டிகளில் ஆரம்பத்தில் அந்தந்த அணிகள் வெற்றி பெற்றன. அதன் பிறகு நடந்த போட்டிகளில் எதிரணியே வெற்றி கண்டுள்ளன. ஆனால், இப்போது 200 ரன்களுக்கு மேல் அடிக்கும் அணிகள் தான் வெற்றி பெறுகின்றன.

510
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

நேற்று பெங்களூரு மைதானத்தில் நடந்த போட்டியில் சென்னை அணி 226 ரன்கள் எடுத்த நிலையில் 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்று ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் நடக்கும் நிலையில், இந்தப் போட்டியில் மும்பை அணி ஜெயிப்பதற்கு அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

610
மும்பை இந்தியன்ஸ்

மும்பை இந்தியன்ஸ்

இந்த மைதானத்தில் நடந்த 2 போட்டிகளில் ஒன்றில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றது. அடுத்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வெற்றி கண்டது. இந்த மைதானத்தில் டாஸ் வெல்லும் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்ய விரும்பும். 

710
மும்பை இந்தியன்ஸ்

மும்பை இந்தியன்ஸ்

பேட்டிங்கிற்கு சாதமான இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோகித் சர்மா, இஷான் கிஷான், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, கேமரூன் க்ரீன், டிம் டேவிட் என்று நட்சத்திர வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். கடைசி வரை இவர்கள் மட்டும் களத்தில் நின்றால் போதும் மும்பை இந்தியன்ஸ் அணி எளிதாக 200 ரன்களுக்கு மேல் குவிக்கும்.

810
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

இதே போன்று ஹைதராபாத் அணியில் ஹாரி ப்ரூக், மாயங்க் அகர்வால், ராகுல் திரிபாதி, எய்டன் மார்க்ரம், அபிஷேக் சர்மா ஆகியோர் பேட்டிங்கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இதே போன்று பந்து வீச்சிலும் மாயங்க் மார்க்கண்டே, உம்ரான் மாலிக், புவனேஷ்வர் குமார் மற்றும் என் நடராஜன் ஆகியோர் சிறப்பாக பந்து வீசி வருகின்றனர்.

910
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

இதுவரையில் நடந்த 19 போட்டிகளில் ஹைதராபாத் அணி 19 போட்டிகளிலும், மும்பை அணி சூப்பர் ஓவர் போட்டி உள்பட 10 போட்டிகளிலும் வெற்றி கண்டுள்ளது. கடைசியாக விளையாடிய போட்டியில் ஹைதராபாத் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரு அணிகளுக்கும் இடையில் நடந்த கடைசி 5 போட்டிகளில் மும்பை 3 போட்டியிலும், ஹைதராபாத் 2 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன. ஆனால், ஹைதராபாத் மைதானத்தில் நடந்த 7 போட்டிகளில் ஹைதராபாத் 4 போட்டியில் வெற்றி கண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

1010
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

இன்று நடக்கும் ராஜீவ் காந்தி மைதானத்தில் இதுவரையில் 46 போட்டிகளில் விளையாடியுள்ள ஹைதராபாத் அணி 31 போட்டிகளில் வெற்றியும், 15 போட்டிகளில் தோல்வியும் கண்டுள்ளது. ஹைதரபாத் அணிக்கு எதிராக மும்பை அதிகபட்சமாக 235 ரன்கள் எடுத்துள்ளது. இதே போன்று மும்பைக்கு எதிராக ஹைதராபாத் 193 ரன்கள் எடுத்துள்ளது. குறைந்தபட்சமாக ஹைதராபாத் 96 ரன்கள் எடுத்துள்ளது. இதே போன்று மும்பை குறைந்தபட்சமாக 87 ரன்கள் எடுத்துள்ளது.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
இஷான் கிஷன்
மும்பை இந்தியன்ஸ்
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
 
27th T20 • WBBLT20
Innings Break
BH-WBH-W
(20.0 ov)225/3
ST-WST-W
-
ST-W chose to bowl.
Schedule ›
1st TEST • NZ vs IND 2026
Stumps
NZNZ
(82.0 ov)243/5
INDIND
-
Day 1
Schedule ›
2nd TEST • PAK vs SL 2026
Live
PAKPAK
325
SLSL
(72.0 ov) 98 & 232/6
Day 3 - Session 2
Schedule ›
28th T20 • WBBLT20
AS-WAS-W
Fri, 20 Nov, 2026
MR-WMR-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
26th T20 • WBBLT20
Result
HH-WHH-W
120
PS-WPS-W
148
Perth Scorchers Women beat Hobart Hurricanes Women by 28 runs
Schedule ›
3rd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
231
ENGENG
328
ENG beat AUS by 97 runs
Schedule ›
2nd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
220
ENGENG
355/6
ENG beat AUS by 135 runs
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
187
INDIND
209
IND beat NZ by 22 runs
Schedule ›
1st ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
132/3
ENGENG
131
AUS won by 7 wickets
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
333
INDIND
89
NZ beat IND by 244 runs
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
abandoned
NZNZ
-
INDIND
-
Match abandoned
Schedule ›
2nd TEST • NZ vs IND 2026
NZNZ
Fri, 27 Nov, 2026
INDIND
03:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
IPL : தோனி முதல் ஸ்டார்க் வரை... 10 ஐபிஎல் அணிகள் கழட்டிவிட்ட பிளேயர்கள் யார்... யார்? முழு பட்டியல் இதோ
Recommended image2
MS Dhoni : தமிழ்நாட்டில் கிரிக்கெட்டில் ஹிட் அடித்த தோனி... சினிமாவில் பிளாப் ஆன கதை தெரியுமா?
Recommended image3
MS Dhoni: ஒரு சிக்ஸர்... ஆயிரம் உணர்வுகள்! தோனியின் ஹெலிகாப்டர் ஷாட்டுக்குப் பின்னால் இருக்கும் கதை!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved