IPL 2023: பாப் டூப்ளெசிஸியின் Fazl டாட்டுவிற்கான அர்த்தம் என்னவென்று தெரியுமா?

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டனான பாப் டூப்ளெசிஸியின் Fazl என்ற டாட்டூ தான் நேற்று முதல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

What is the secret behind RCB Player Faf Du Plessis Tattoo in rib of his body?

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான 24 ஆவது போட்டி நேற்று பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் நடந்தது. இதில், டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டனான பாப் டூப்ளெசி பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் ஆடிய சிஎஸ்கே 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 226 ரன்கள் எடுத்தது. அதன் பிறகு 227 ரன்களை எற்றி இலக்காக கொண்ட ஆர்சிபி அணி ஆடியது. இதில்,  மேக்ஸ்வெல் மற்றும் பாப் டூப்ளெஸி இருவரும் சரவெடியாக வெடிக்க ஸ்கோர் மளமளவென்று உயர்ந்தது. ஒரு கட்டத்தில் மேக்ஸ்வெல் ஆட்டமிழக்க, டூப்ளெசிஸியும் ஆட்டமிழந்தார்.

IPL 2023: ஹைதராபாத்தில் நடந்த போட்டிகளில் 31ல் சன்ரைசர்ஸ் வெற்றி; இன்றைய போட்டி யாருக்கு சாதகம்?

ஆர்சிபி அணியின் கேப்டனான பாப் டூப்ளெசிஸி 5 போட்டிகளில் 3ல் அரைசதம் அடித்துள்ளார். தற்போது வரையில் 259 ரன்கள் எடுத்து ஆரஞ்ச் கேப் பெற்றுள்ளார். நேற்றைய போட்டியில் அவருக்கு வயிற்றுப் பகுதியில் அடி பட்டிருந்தாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாலும் கட்டு போட்டுக் கொண்டு சிறப்பாக விளையாடினார். எனினும், ஆர்சிபி அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

IPL 2023: சும்மா கத்திக்கிட்டே இருந்த விராட் கோலிக்கு ஃபைன் போட்ட நடுவர்!

இந்த நிலையில், தான் நேற்றைய போட்டியில் அவருக்கு வயிற்றுப் பகுதியில் கட்டுப் போடும் போது இடது பக்க மார்பிற்கு கீழே விலா எலும்பு பகுதியில் அவர் போட்டுள்ள Fazl என்று அரபு மொழியில் டாட்டூ போட்டுள்ளார். இதற்கான அர்த்தம் என்னவென்று தெரியுமா? உண்மையில் இதற்கு கருணை" என்றும், சர்வ வல்லவரின் விசுவாசி என்றும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. கடவுளின் அருளால் தனது வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றத்திற்காக டு பிளெசிஸ் இவ்வாறு டாட்டூ போட்டுள்ளார். 

IPL 2023: சிஎஸ்கே போட்டிக்கு கேப்டன் மில்லர் கெட்டப்பில் வந்திருந்த தனுஷ்; வைரலாகும் புகைப்படம்!

இதே போன்று அவரது வலது கையில் ஆர்ம்ஸ் பகுதியில் டைஸ் எ டோமினோ XVII I MMXI என்று டாட்டூ போட்டிருப்பார். இதற்கான விளக்கம் என்பது இங்கிலாந்தில் உள்ள லார்ட்ஸில்  புரோட்டீஸ் அணிக்காக அவர் அறிமுகமானதைக் குறிக்கிறது. இதே போன்று, அடிலெய்டு ஓவல் மைதானத்தை நோக்கி திசைகாட்டி உள்ளது. இது அவரது அணிக்காக அவர் அறிமுகமான டெஸ்ட் அரங்கை குறிக்கிறது. அதே போன்று திருமணத்தின் தேதிகள் மற்றும் அவர் ஞானஸ்நானம் பெற்ற நாள் டாட்டூவாக போடப்பட்டுள்ளது. அதற்கு மேலே அகாபே, அதாவது நிபந்தனையற்ற அன்பு என்று குறிப்பிடப்படுகிறது.

 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios