IPL 2023: சும்மா கத்திக்கிட்டே இருந்த விராட் கோலிக்கு ஃபைன் போட்ட நடுவர்!
சென்னைக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி வீரர் விராட் கோலி சும்மா சும்மா கத்திக்கிட்டே இருந்த நிலையில், அவருக்கு போட்டி சம்பளத்திலிருந்து 10 சதவிகிதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
விராட் கோலிக்கு அபராதம்
ஐபிஎல் 2023 கிரிக்கெட் தொடரின் 16வது சீசனில் ஆர்சிபி - சிஎஸ்கே இடையேயான போட்டி நேற்று பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்தது. இதில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
விராட் கோலிக்கு அபராதம்
அதன்படி முதலில் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ருத்துராஜ் கெய்வாட் ஏமாற்றம் அளித்தார். அடுத்து வந்த ரஹானே மற்றும் கான்வே இருவரும் ஆர்சிபி அணியின் பந்து வீச்சை துவம்சம் செய்தனர்.
விராட் கோலிக்கு அபராதம்
அதிரடியாக ஆடிய ரஹானே 20 பந்தில் 37 ரன்கள் அடித்தார். அதன்பின்னர் கான்வேவுடன் ஜோடி சேர்ந்த ஷிவம் துபேவும் அதிரடியாக ஆடினார். கான்வே மற்றும் துபே ஆகிய இருவரும் அடித்து ஆடி அரைசதம் அடித்தனர். டெவான் கான்வே 45 பந்தில் 83 ரன்களையும், துபே 27 பந்தில் 52 ரன்களையும் குவித்தனர். கான்வே, துபேவின் அதிரடி அரைசதத்தால் 20 ஓவரில் 226 ரன்களை குவித்தது சிஎஸ்கே.
விராட் கோலிக்கு அபராதம்
227 ரன்கள் என்ற கடினமான இலக்கை விரட்டிய ஆர்சிபி அணியின் தொடக்க வீரர் விராட் கோலி 6 ரன்களுக்கும், மஹிபால் லோம்ரார் ரன்னே அடிக்காமலும் ஆட்டமிழந்தனர். ஆனால் கேப்டனும் தொடக்க வீரருமான ஃபாஃப் டுப்ளெசிஸும், மேக்ஸ்வெல்லும் இணைந்து காட்டடி அடித்து இருவருமே அரைசதம் அடித்தனர்.
விராட் கோலிக்கு அபராதம்
இதையடுத்து 3வது விக்கெட்டுக்கு டுப்ளெசிஸ் - மேக்ஸ்வெல் இணைந்து 126 ரன்களை குவித்தனர். பெங்களூருவில் சிக்ஸர் மழை பொழிந்த மேக்ஸ்வெல், 36 பந்தில் 8 சிக்ஸர்களுடன் 76 ரன்களை குவித்து ஆட்டமிழக்க, டுப்ளெசிஸும் 62 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
விராட் கோலிக்கு அபராதம்
அதன் பின்னர் அதிரடியாக ஆடிய தினேஷ் கார்த்திக்கும் 14 பந்தில் 28 ரன்கள் அடித்து ஆட்டமிழக்க, அதன் பின்னர் இம்பேக்ட் பிளேயராக இறங்கிய பிரபுதேசாய் 11 பந்தில் 2 சிக்ஸர்களுடன் 19 ரன்கள் அடித்தாலும் கூட, ஆர்சிபி அணியால் 20 ஓவரில் 218 ரன்கள் தான் அடிக்க முடிந்தது. இதன் மூலம் 8 ரன் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணி அபார வெற்றி பெற்றது.
விராட் கோலிக்கு அபராதம்
இந்த நிலையில், ஆரம்பத்திலேயே 6 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறிய விராட் கோலி டிரெஸ்ஸிங் ரூமில் அமர்ந்திருந்து மேக்ஸ்வெல்லின் ஆட்டத்தை கண்டு ரசித்தார். அதோடு, ஒவ்வொரு சிக்ஸர் அடிக்கும் போது கத்திக் கொண்டே இருந்தார்.
விராட் கோலிக்கு அபராதம்
விராட் கோலியின் இந்த செயலானது ஐபிஎல் விதிமீறல்களுக்கு எதிரானது என்பதால், நடுவர்கள், அவருக்கு போட்டி சம்பளத்திலிருந்து 10 சதவிகிதம் அபராதம் விதித்துள்ளனர். விராட் கோலியின் இந்த செயலுக்கு ரசிகர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதற்கு முன்னதாக கூட டெல்லி போட்டியின் போது விராட் கோலி மிகவும் ஆக்ரோஷமாக காணப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
விராட் கோலிக்கு அபராதம்
இந்தப் போட்டியில் அவர் 21 ரன்கள் எடுத்திருந்தால் சென்னைக்கு எதிராக 1000 ரன்கள் கடந்திருப்பார். ஆனால், அவர் 6 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.