MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • IPL 2023: சிஎஸ்கே போட்டிக்கு கேப்டன் மில்லர் கெட்டப்பில் வந்திருந்த தனுஷ்; வைரலாகும் புகைப்படம்!

IPL 2023: சிஎஸ்கே போட்டிக்கு கேப்டன் மில்லர் கெட்டப்பில் வந்திருந்த தனுஷ்; வைரலாகும் புகைப்படம்!

சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையிலான போட்டிக்கு நடிகர் தனுஷ் தான் நடிக்கும் அடுத்த படமான கேப்டன் மில்லர் கெட்டப்பில் வந்து போட்டியை நேரில் பார்த்து ரசித்துள்ளார்.

2 Min read
Author : Rsiva kumar
Published : Apr 18 2023, 10:06 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19
சென்னை சூப்பர் கிங்ஸ்

சென்னை சூப்பர் கிங்ஸ்

ஐபிஎல் 2023 கிரிக்கெட் தொடரின் 16வது சீசனில் ஆர்சிபி - சிஎஸ்கே இடையேயான போட்டி நேற்று பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்தது. இதில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
29
சென்னை சூப்பர் கிங்ஸ்

சென்னை சூப்பர் கிங்ஸ்

அதன்படி முதலில் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ருத்துராஜ் கெய்வாட் ஏமாற்றம் அளித்தார். அடுத்து வந்த ரஹானே மற்றும் கான்வே இருவரும் ஆர்சிபி அணியின் பந்து வீச்சை துவம்சம் செய்தனர்.

39
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - சென்னை சூப்பர் கிங்ஸ்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - சென்னை சூப்பர் கிங்ஸ்

அதிரடியாக ஆடிய ரஹானே 20 பந்தில் 37 ரன்கள் அடித்தார். அதன்பின்னர் கான்வேவுடன் ஜோடி சேர்ந்த ஷிவம் துபேவும் அதிரடியாக ஆடினார். கான்வே மற்றும் துபே ஆகிய இருவரும் அடித்து ஆடி அரைசதம் அடித்தனர்.

49
ஆர்சிபி

ஆர்சிபி

டெவான் கான்வே 45 பந்தில் 83 ரன்களையும், துபே 27 பந்தில் 52 ரன்களையும் குவித்தனர். கான்வே, துபேவின் அதிரடி அரைசதத்தால் 20 ஓவரில் 226 ரன்களை குவித்தது சிஎஸ்கே.

59
விராட் கோலி

விராட் கோலி

227 ரன்கள் என்ற கடினமான இலக்கை விரட்டிய ஆர்சிபி அணியின் தொடக்க வீரர் விராட் கோலி 6 ரன்களுக்கும், மஹிபால் லோம்ரார் ரன்னே அடிக்காமலும் ஆட்டமிழந்தனர். ஆனால் கேப்டனும் தொடக்க வீரருமான ஃபாஃப் டுப்ளெசிஸும், மேக்ஸ்வெல்லும் இணைந்து காட்டடி அடித்து இருவருமே அரைசதம் அடித்தனர்.

69
எம் எஸ் தோனி

எம் எஸ் தோனி

இதையடுத்து 3வது விக்கெட்டுக்கு டுப்ளெசிஸ் - மேக்ஸ்வெல் இணைந்து 126 ரன்களை குவித்தனர். பெங்களூருவில் சிக்ஸர் மழை பொழிந்த மேக்ஸ்வெல், 36 பந்தில் 8 சிக்ஸர்களுடன் 76 ரன்களை குவித்து ஆட்டமிழக்க, டுப்ளெசிஸும் 62 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 
 

79
சென்னை சூப்பர் கிங்ஸ்

சென்னை சூப்பர் கிங்ஸ்

அதன் பின்னர் அதிரடியாக ஆடிய தினேஷ் கார்த்திக்கும் 14 பந்தில் 28 ரன்கள் அடித்து ஆட்டமிழக்க, அதன் பின்னர் இம்பேக்ட் பிளேயராக இறங்கிய பிரபுதேசாய் 11 பந்தில் 2 சிக்ஸர்களுடன் 19 ரன்கள் அடித்தாலும் கூட, ஆர்சிபி அணியால் 20 ஓவரில் 218 ரன்கள் தான் அடிக்க முடிந்தது. இதன் மூலம் 8 ரன் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணி அபார வெற்றி பெற்றது.

89
சிஎஸ்கே

சிஎஸ்கே

இந்த வெற்றியின் மூலமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளில் வெற்றி கண்டுள்ளது. இந்த நிலையில், சென்னை போட்டி என்றாலே சினிமா பிரபலங்கள் கண்டிப்பாக வருவது உண்டு. இதுவே சென்னையில் போட்டி நடந்திருந்தால் சொல்லவே வேணாம், கோலிவுட் வட்டாரமே சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் ஒன்று கூடி விடுவார்கள். 

99
தனுஷ் - கேப்டன் மில்லர்

தனுஷ் - கேப்டன் மில்லர்

இது பெங்களூருவில் நடந்த போட்டி என்பதால், அங்கு நடிகர் தனுஷ் தான் நடிக்கும் கேப்டன் மில்லர் பட கெட்டப்பில் வந்துள்ளார். அப்போது அவருடன் கன்னட நடிகர் ஷிவராஜ் குமாரும் வந்திருந்தார். இருவரும் ஒன்றாக அமர்ந்து போட்டியை பார்த்துள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
சிஎஸ்கே
தனுஷ்
எம். எஸ். தோனி
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
விராட் கோலி

Latest Videos
Recommended Stories
Recommended image1
Vaibhav Sooryavanshi: SRHஐ துவம்சம் செய்த RR! 'வைபவ்' ஆட்டத்தால் குவாலிபையர் 2-க்குள் கெத்தாக நுழைவு
Recommended image2
Vaibhav Sooryavanshi: மரண காட்டு காட்டிய வைபவ்.. ஒரே மேட்ச்ல் இத்தனை சாதனைகளா..?
Recommended image3
Vaibhav Suryavanshi: பவுலர்களை பொளந்து கட்டிய வைபவ்.. SRH வெற்றி பெற 244 ரன்கள் இலக்கு..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved