வந்தாரு, நின்னாரு, சென்றாரு, ரிபீட்டூ, வந்தாரு, நின்னாரு, சென்றாரு ரிபீட்டூ - சூர்யகுமார் யாதவ் கோல்டன் டக்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2ஆவது ஒரு நாள் போட்டியில் 2ஆவது முறையாக கோல்டன் டக்கில் சூர்யகுமார் யாதவ் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்துள்ளார்.
டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடந்து வருகிறது. முதல் ஒரு நாள் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இதைத் தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையிலான 2ஆவது ஒரு நாள் போட்டி இன்று விசாகப்பட்டினத்தில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் இருவரும் இந்திய அணியின் ரன் கணக்கை தொடங்கினர்.
இந்தியா:
ரோகித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், கேஎல் ராகுல், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்ஷர் படேல், குல்தீப் யாதவ், முகமது ஷமி, முகமது சிராஜ்.
ஆஸ்திரேலியா
டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், ஸ்டீவ் ச்மித், மார்னஷ் லபுஷேன், அலெக்ஸ் கேரி, கேமரூன் க்ரீன், மார்கஸ் ஸ்டாய்னிஸ், சீன் அபாட், நாதன் எல்லிஸ், மிட்செல் ஸ்டார், ஆடம் ஜம்பா.
போட்டியில் முதல் ஓவரின் 3ஆவது பந்திலேயே சுப்மன் கில் ரன் ஏதும் எடுக்காமல் மிட்செல் ஸ்டார்க் பந்தில் லபுஷேனிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இவரைத் தொடர்ந்து நிலைத்து நின்று ஆட வேண்டிய கேப்டன் ரோகித் சர்மா ஸ்டார்க் பந்தில் ஸ்லிப்பில் நின்றிருந்த ஸ்டீவ் ஸ்மித்திடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து வந்த அதிரடி பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் நிலைத்து நிற்பார் என்று எதிர்பார்த்த நிலையில், முதல் போட்டியில் அவுட்டானதைப் போன்று இந்தப் போட்டியிலும் ஸ்டார்க் பந்தில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். வந்த முதல் பந்திலேயே அவர் ஆட்டமிழந்துள்ளார்.
கிறிஸ் கெயிலைத் தொடர்ந்து வரலாற்று சாதனை படைத்த ஷோஃபி டிவைன்!
இதற்கு முன்னதாக இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒரு நாள் போட்டியிலும், 4.6ஆவது ஓவரில் மிட்செல் ஸ்டார் ஸ்டார் பந்தில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். அவர் சந்தித்த முதல் பந்திலேயே கோல்டன் டக் முறையில் வெளியேறியது இது முதல் முறையாகும். தற்போது 2ஆவது ஒரு நாள் போட்டியில் 4.5ஆவது பந்தில் கோல்டன் டக் முறையில் 2ஆவது முறையாக ஆட்டமிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலமாக 2 போட்டிகளில் அடுத்தடுத்து கோல்டன் டக் முறையில் ஆட்டமிழந்த வீரர் என்ற சாதனையை சூர்யகுமார் யாதவ் படைத்துள்ளார்.
காலை முதல் மிதமான மழை; முழுசா தார்பாயால் மூடப்பட்ட விசாகப்பட்டினம் மைதானம்: டாஸ் தாமதம் ஏற்படுமா?