காலை முதல் மிதமான மழை; முழுசா தார்பாயால் மூடப்பட்ட விசாகப்பட்டினம் மைதானம்: டாஸ் தாமதம் ஏற்படுமா?

விசாகப்பட்டினத்தில் விட்டு விட்டு மழை பெய்து வந்த நிலையில் தற்போது மழை நின்ற நிலையில், போட்டிக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று கூறப்படுகிறது.
 

Rain has completely stopped; although Ind vs Aus match may affect toss in Visakhapatnam

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபியை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி சாம்பியனானது. இதைத் தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையிலான 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர் தற்போது நடந்து வருகிறது. முதல் போட்டியில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து, இரு அணிகளுக்கு இடையிலான 2ஆவது ஒரு நாள் போட்டி இன்று ஆந்திரா மாநிலம் விசாப்பட்டினத்தில் பகல் - இரவு ஆட்டமாக நடக்கிறது. இந்தப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றும்.

 

 

முதல் ஒரு நாள் போட்டியில் ஓய்வில் இருந்த ரோகித் சர்மா, இந்தப் போட்டியில் விளையாடுகிறார். ஆனால், கோடை காலமான இந்த மாதத்தில் பல மாநிலங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று முன்தினம் பகலில் கன மழை கொட்டி தீர்த்தது. ஜம்மு காஷ்மீர், ஹிமாச்சல பிரதேசம், உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் இன்று இடியுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Asian Race Walking Championships - 20 கி.மீ பிரிவில் அக்‌ஷ்தீப் சிங் தங்கம், பிரியங்கா வெண்கலம் வென்று சாதனை!

குறிப்பாக விசாகப்பட்டினத்தில் இன்று இடியுடன் கூடிய கன மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக இரு அணிகளுக்கு இடையிலான 2ஆவது ஒரு நாள் போட்டி நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து விசாகப்பட்டினம் கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் கூறியிருப்பதாவது: தண்ணீர் வெளியேறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. மழை பெய்து நின்று விட்டால் ஒரு மணி நேரத்திற்கு பிறகு போட்டி தொடங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருக்கிறோம். முழு மைதானத்தையும் மழையால் நனைந்து விடாமல் இருக்க தார்பாய் கொண்டு மூடியுள்ளோம் என்று கூறியிருந்தனர். 

காலை முதல் மிதமான மழை; முழுசா தார்பாயால் மூடப்பட்ட விசாகப்பட்டினம் மைதானம்: டாஸ் தாமதம் ஏற்படுமா?

இன்று காலை முதல் விசாகப்பட்டினம் முழுவதும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மதுரவாடா மைதானம் உள்ளிட்ட சில பகுதிகளில் 35 மிமீ கனமழை பதிவாகியுள்ளது. அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமானது வரை மழை தொடர வாய்ப்புள்ளது. காலை 10 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை மழை படிப்படியாக நிற்கலாம் என்று தகவல் வெளியாகியிருந்தது. இந்த நிலையில், தற்போது மழை முற்றிலும் நின்றுவிட்ட நிலையில், வானம் வெளிச்சத்துடன் காணப்படுகிறது. ஆதலால், போட்டி க்கு எந்த பிரச்சனையும் இருக்காது என்று கூறப்படுகிறது. எனினும், போதிய் டாஸ் போடுவதில் மட்டும் கொஞ்சம் காலதாமதம் ஆகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

 

 

 

கிறிஸ் கெயிலைத் தொடர்ந்து வரலாற்று சாதனை படைத்த ஷோஃபி டிவைன்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios