ஜியோ சினிமாவில் ஐபிஎல் மாதிரி ஏலம் நடத்தப்பட்டு வருகிறது. இதில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக சிஎஸ்கேயின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா டிராவிஸ் ஹெட்டை ரூ.7.5 கோடிக்கு ஏலம் எடுத்தார்.
ஆண்டுதோறும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தால் நடத்தப்படும் இந்தியன் பிரீமியர் லீக் தொடர் எனப்படும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் வரும் 2024 ஆம் ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நடக்க இருக்கிறது. இந்த தொடருக்கான ஐபிஎல் ஏலம் வரும் 19ஆம் தேதி நாளை துபாயில் நடக்க இருக்கிறது.
இந்த தொடருக்கு தங்களது பெயரை பதிவு செய்த 1166 வீரர்களில் 833 வீரர்கள் நீக்கப்பட்டுள்ளனர். மேலும், 333 வீரர்கள் மட்டுமே ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்கின்றனர். இதில், 214 இந்தியர்கள் மற்றும் 119 வெளிநாட்டு வீரர்கள். இந்த 333 வீரர்களில் 77 வீரர்கள் மட்டுமே ஏலம் எடுக்கப்பட இருக்கின்றனர். மேலும், இந்த 333 வீரர்களில் 217 Uncapped வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.
இந்த நிலையில், ஜியோ சினிமா மாதிரி ஏலம் ஒன்றை நடத்தியது. இதில், முன்னாள் கிரிக்கெட் பிரபலங்கள் இடம் பெற்று ஒவ்வொரு அணிக்காகவும் வீரர்களை ஏலம் எடுத்தனர். அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா, தனது அணியை பிரதிபலிக்கும் வகையில், சிஎஸ்கே அணிக்காக ஏலம் எடுத்தார்.
இதில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆஸ்திரேலியாவின் அதிரடி வீரர் டிராவிஸ் ஹெட்டை ரூ.7.5 கோடிக்கு ஏலம் எடுத்தார். ஹைதராபாத் அணிக்காக இயான் மோர்கன் ரூ.17.5 கோடிக்கு வணிந்து ஹசரங்காவை ஏலம் எடுத்தார். ஆர்சிபி அணிக்காக மைக் ஹெசான் ரூ.18.5 கோடிக்கு மிட்செல் ஸ்டார்க்கை ஏலம் எடுத்தார். பார்த்தீவ் பட்டீல் குஜராத் ஜெயிண்ட்ஸ் அணிக்காக தென் ஆப்பிரிக்கா வீரரான கெரால்டு கோட்ஸியை ரூ.18 கோடிக்கு ஏலம் எடுத்தது.
இதில் அதிகபட்சமாக ரூ.18.5 கோடி வரையில் ஏலம் எடுக்கப்பட்டது ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மிட்செல் ஸ்டார்க் தான். அவர், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். இவரது வரிசையில், ஷர்துல் தாக்கூர் ரூ.14 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். மேலும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ரூ.10.50 கோடிக்கு தில்ஷன் மதுஷங்கா ஏலம் எடுக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இது மாதிரி ஏலம் மட்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
