ஐபிஎல் 2024 தொடருக்கான மினி ஏலம் நாளை 19 ஆம் தேதி துபாயில் நடக்க உள்ள நிலையில், இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் ஸ்ரீகாந்த் மற்றும் அவரது மகன் அனிருத்தா இருவரும் இணைந்து நடத்திய மாதிரி ஏலத்தில் ஆஸ்திரேலியா வீரர் டிராவிஸ் ஹெட் ரூ.17.5 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளார்.

இந்தியாவில் நடக்கும் 17ஆவது ஐபிஎல் சீசன் வரும் 2024 ஆம் ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நடக்க இருக்கிறது. இந்த ஏலத்தில் 333 வீரர்கள் உறுதி செய்யப்பட்ட நிலையில், மொத்தமாக 77 வீரர்கள் மட்டுமே ஏலம் எடுக்கப்பட இருக்கின்றனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 6 (வெளிநாட்டு வீரர்கள் 3), டெல்லி கேபிடல்ஸ் 9 (4), குஜராத் ஜெயிண்ட்ஸ் 8 (2), கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 12 (4), லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் 6 (2), மும்பை இந்தியன்ஸ் 8 (4), பஞ்சாப் கிங்ஸ் 8 (2), ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 6 (3), ராஜஸ்தான் ராயல்ஸ் 8 (3), சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 6 (3) என்று மொத்தமாக 77 வீரர்கள் ஏலம் எடுக்கப்பட இருக்கின்றனர்.

அறிமுக வீரர்களுக்கு கவலை இல்லை - கேப் செய்யப்படாத வீரர்களுக்கு ஊக்கத் தொகை திட்டம் – பிசிசிஐ முடிவு!

இந்த நிலையில், நாளை நடக்க இருக்கும் ஐபிஎல் ஏலம் எப்படி இருக்கும் என்பதை பிரதிபலிக்கும் வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் மற்றும் அவரது மகன் அனிருத்தா இருவரும் இணைந்து மாதிரி ஏலம் ஒன்றை நடத்தியுள்ளனர். இதில், பிரபலங்கள் ஒவ்வொரு அணி சார்பாக கலந்து கொண்டு வீரர்களை ஏலத்தில் எடுத்துள்ளனர். அதில் எந்த எத்தனை கோடிக்கு எந்த அணிக்காக ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்கள் என்று பார்க்கலாம் வாங்க. உலகக் கோப்பை வெல்ல முக்கிய காரணமாக இருந்த ஆஸ்திரேலியா வீரர் டிராவிஸ் ஹெட் ரூ.17.50 கோடிக்கு ஹைதராபாத் அணி சார்பில் ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.

View post on Instagram

SA vs IND:தனிப்பட்ட காரணத்திற்காக டெஸ்ட் தொடரிலிருந்து விலகிய இஷான் கிஷான்: என்னவா இருக்கும்? அதுவா இருக்குமோ?

இதே போன்று உலகக் கோப்பை தொடரில் அறிமுகமாகி தனக்கென்று ஒரு அடையாளத்தை வகுத்துக் கொண்ட நியூசிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் ரச்சின் ரவீந்திரா குஜராத் அணிக்காக ரூ.17.50 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார். இதே போன்று ஷர்துல் தாக்கூர் ரூ.5.50 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சார்பில் ஏலம் எடுக்கப்பட்டார். மேலும், ஸ்டீவ் ஸ்மித்தும் ரூ.2 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஏலம் எடுக்கப்பட்டார். இலங்கை அணியின் ஆல்ரவுண்டரான வணிந்து ஹசரங்காவை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ரூ.8 கோடிக்கு ஏலம் எடுத்தது.

Under 19 Asia Cup 2023 Final, Dubai: வரலாற்றில் முதல் முறையாக ஆசிய கோப்பையை கைப்பற்றிய வங்கதேசம் யு19!

ஆஸ்திரேலியா வீரர் மிட்செல் ஸ்டார்க் கொல்கத்தா அணிக்காக ரூ.7.5 கோடிக்கும், ஆப்கானிஸ்தான் வீரரான முஜீப் உர் ரஹ்மான் ரூ.5 கோடிக்கு லக்னோ அணி சார்பில் ஏலம் வாங்கப்பட்டார். மேலும், வங்கதேச வீரரான முஷ்தாபிஜூர் ரஹ்மான் ரூ.3.5 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணியும், நியூசிலாந்து வீரர் லாக்கி ஃபெர்குசன் ரூ.2 கோடிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் ஏலத்தில் எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இது மாதிரி ஏலம் மட்டுமே. இதே போன்று ஜியோ மாக் ரூம் ஐபிஎல் ஏலம் ஒன்றை நடத்த இருக்கிறது. இந்த மாதிரி ஏலம் இன்று பிற்பகல் 12 மணிக்கு நடக்க இருக்கிறது.

ஷ்ரேயாஸ் ஐயர், சாய் சுதர்சன் காம்போவில் இந்தியா சிம்பிள் வெற்றி – ஒருநாள் தொடரில் 1-0 என்று முன்னிலை!

இந்நிகழ்ச்சியில் பல முன்னாள் இந்திய மற்றும் ஓவர்சீஸ் வீரர்கள் பங்கேற்கின்றனர். சுரேஷ் ரெய்னா, இயான் மோர்கன், அனில் கும்ப்ளே, பார்த்தீவ் படேல், ஆகாஷ் சோப்ரா, மைக் ஹெசன், ஆர்.பி.சிங், அபினவ் முகுந்த், ராபின் உத்தப்பா ஆகியோர் பங்கேற்கின்றனர்.

Scroll to load tweet…