IPL Auction: கம்மின்ஸ், ஸ்டார்க் எல்லாம் ரூ.14 கோடிக்கு அதிகமாக ஏலம் எடுக்கப்படுவார்கள் – அஸ்வின் கணிப்பு!
நாளை நடக்க இருக்கும் ஐபிஎல் ஏலத்தில் எந்தெந்த வீரர்கள் எத்தனை கோடிக்கு ஏலம் எடுக்கப்படுவார்கள் என்று இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கணித்து கூறியுள்ளார்.
Travis Head and Rachin Ravindra
இந்தியாவில் நடக்கும் 17ஆவது ஐபிஎல் சீசன் வரும் 2024 ஆம் ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நடக்க இருக்கிறது. இந்த ஏலத்தில் 333 வீரர்கள் உறுதி செய்யப்பட்ட நிலையில், மொத்தமாக 77 வீரர்கள் மட்டுமே ஏலம் எடுக்கப்பட இருக்கின்றனர். எந்தெந்த வீரர்கள் எத்தனை கோடிக்கு ஏலம் எடுக்கப்படுவார்கள்? ரவிச்சந்திரன் அஸ்வின் கணிப்பு!
Harshal Patel
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 6 (வெளிநாட்டு வீரர்கள் 3), டெல்லி கேபிடல்ஸ் 9 (4), குஜராத் ஜெயிண்ட்ஸ் 8 (2), கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 12 (4), லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் 6 (2), மும்பை இந்தியன்ஸ் 8 (4), பஞ்சாப் கிங்ஸ் 8 (2), ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 6 (3), ராஜஸ்தான் ராயல்ஸ் 8 (3), சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 6 (3) என்று மொத்தமாக 77 வீரர்கள் ஏலம் எடுக்கப்பட இருக்கின்றனர்.
Gerald Coetzee
இதில், ஆஸ்திரேலியா வீரர்களான பேட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், டிராவிஸ் ஹெட் ஆகியோருக்கு கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதே போன்று நியூசிலாந்து அணியின் ஆல்ரவுண்டரான ரச்சின் ரவீந்திராவிற்கும் அதிக மவுசு இருப்பதால் குஜராத், மும்பை அணிகளுக்கு இடையில் கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Rovman Powell
இந்த நிலையில் தான் இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் மற்றும் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம் பெற்றவருமான ரவிச்சந்திரன் அஸ்வின் எந்தெந்த வீரர்கள் எத்தனை கோடிக்கு ஏலம் எடுக்கப்படுவார்கள் என்று கணித்துள்ளார். அதன்படி, பஞ்சாப் கிங்ஸ் அணியில் ரூ.9 கோடிக்கு விலையாடி வந்த தமிழக வீரர் ஷாருக் கான் ரூ.10 முதல் ரூ.14 கோடி வரையில் ஏலம் எடுக்கப்படலாம்.
Indian Premier League 2024
நியூசி, ஆல்ரவுண்டர் ரச்சின் ரவீந்திரா ரூ.4 முதல் ரூ.7 கோடிக்கு ஏலம் எடுக்கப்படலாம். இது அவரது முதல் ஐபிஎல் சீசன் என்பது குறிப்பிடத்தக்கது. ஆர்சிபிக்காக விளையாடி வந்த வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷல் படே ரூ.4 முதல் ரூ.10 கோடி வரையிலும், ரோவ்மன் பவல் ரூ.4 முதல் ரூ.7 கோடி வரையிலும் ஏலம் எடுக்கப்படலாம்.
IPL 2024
உலகக் கோப்பை தொடர் மற்றும் இந்தியாவிற்கு எதிரான டி20 தொடரில் அசத்திய தென் ஆப்பிரிக்கா வீரர் ஜெரால்டு கோட்ஸி அதிகபட்சமாக ரூ.7 முதல் ரூ.10 கோடி வரையில் ஏலத்தில் எடுக்கப்படுவதற்கு அதிக சாத்தியக்கூறுகள் இருப்பதாக கூறியுள்ளார். இதே போன்று உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு முக்கிய காரணமாக டிராவிஸ் ஹெட் ரூ.2 முதல் ரூ.4 கோடி வரையில் ஏலம் எடுக்கப்படலாம்.
IPL Mini Auction 2024
இவர்களது வரிசையில் கேகேஆர் வீரரான உமேஷ் யாதவ் இடம் பெற்றுள்ளார். அவர் ரூ.4 முதல் ரூ.7 கோடி வரையிலும், பேட் கம்மின்ஸ் ரூ.14 கோடிக்கும் அதிகமாகவும், மிட்செல் ஸ்டார்க் ரூ.14 கோடிக்கு அதிகமாகவும், ஆர்சிபியின் ஆல்ரவுண்டர் வணிந்து ஹசரங்கா ரூ.10 முதல் ரூ.14 கோடி வரையிலும் ஏலம் எடுக்கப்படலாம் என்று கணித்துள்ளார். ஆனால், எந்த அணி எந்த வீரரை ஏலம் எடுக்கப்படும் என்று குறிப்பிடவில்லை.
IPL Auction 19th December
ரவிச்சந்திரன் அஸ்வினின் அதிக தொகைக்கான கணிப்பில் ஆஸ்திரேலியா வீரர்கள் தான் இடம் பெற்றுள்ளனர். அவர்களில் பேட் கம்மின்ஸ் மற்றும் மிட்செல் ஸ்டார்க் இருக்கின்றனர். இருவரும் ரூ.14 கோடிக்கு அதிகமாக ஏலம் எடுக்கப்படலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.