ஐபிஎல் 16வது சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம். 

ஐபிஎல் 16வது சீசன் நேற்று தொடங்கி விறுவிறுப்பாக நடந்துவருகிறது. முதல் போட்டியில் சிஎஸ்கேவை வீழ்த்திய நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணி, இந்த சீசனை வெற்றியுடன் தொடங்கியது. 

இன்று பிற்பகல் மொஹாலியில் நடந்த போட்டியில் கேகேஆரை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது. இரவு லக்னோவில் நடந்துவரும் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் - டெல்லி கேபிடள்ஸ் அணிகள் ஆடிவருகின்றன. 

நாளை (ஏப்ரல் 2) ஞாயிற்றுக்கிழமை என்பதால் 2 போட்டிகள் நடக்கின்றன. பிற்பகல் 3.30 மணிக்கு ஹைதராபாத்தில் நடக்கும் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இரவு 7.30 மணிக்கு நடக்கும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - ஆர்சிபி அணிகள் மோதுகின்றன.

IPL 2023:தோனி இந்த மாதிரி தப்புலாம் செய்யலாமா? தோனியின் மோசமான கேப்டன்சி தான் தோல்விக்கு காரணம்! சேவாக் அதிரடி

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம். 

உத்தேச சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி:

மயன்க் அகர்வால், அபிஷேக் ஷர்மா, ராகுல் திரிபாதி, ஹாரி ப்ரூக், க்ளென் ஃபிலிப்ஸ் (விக்கெட் கீப்பர்), அப்துல் சமாத், வாஷிங்டன் சுந்தர், அடில் ரஷீத், கார்த்திக் தியாகி, ஃபஸல்ஹக் ஃபரூக்கி, உம்ரான் மாலிக்.

IPL 2023: இந்த சீசனில் நான் ரொம்ப எதிர்பார்க்குற பிளேயர் அவர்தான்! வேற லெவல் சம்பவம் வெயிட்டிங் - ஹர்பஜன் சிங்

உத்தேச ராஜஸ்தான் ராயல்ஸ் அணி:

ஜோஸ் பட்லர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், தேவ்தத் படிக்கல், சஞ்சு சாம்சன்(கேப்டன், விக்கெட் கீப்பர்), ஷிம்ரான் ஹெட்மயர், ரியான் பராக், ஜேசன் ஹோல்டர், ரவிச்சந்திரன் அஷ்வின், டிரெண்ட் போல்ட், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் சென்.