IPL 2023:தோனி இந்த மாதிரி தப்புலாம் செய்யலாமா? தோனியின் மோசமான கேப்டன்சி தான் தோல்விக்கு காரணம்! சேவாக் அதிரடி
ஐபிஎல் 16வது சீசனின் முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸிடம் சிஎஸ்கே அணி தோல்வியை தழுவிய நிலையில், கேப்டன்சியில் தோனி கோட்டைவிட்ட இடங்களை சுட்டிக்காட்டியுள்ளார் வீரேந்திர சேவாக்.
ஐபிஎல் 16வது சீசன் நேற்று தொடங்கியது. அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்த முதல் போட்டியில் சிஎஸ்கேவும் குஜராத் டைட்டன்ஸும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் ஆடிய சிஎஸ்கே அணி, ருதுராஜ் கெய்க்வாட்டின் அதிரடியான பேட்டிங்கால்(50 பந்தில் 92 ரன்கள்) 20 ஓவரில் 178 ரன்கள் அடித்தது. அதிரடியாக ஆடி சதத்தை நெருங்கிய ருதுராஜ் கெய்க்வாட் 92 ரன்களுக்கு ஆட்டமிழந்து 8 ரன்னில் சதத்தை தவறவிட்டார்.
179 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய குஜராத் டைட்டன்ஸ் அணி, கடைசி ஓவரில் இலக்கை அடித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று வெற்றியுடன் இந்த சீசனை தொடங்கியது.
IPL 2023: லக்னோ சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேபிடள்ஸ் மோதும் போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்
இந்த போட்டியில் சிஎஸ்கே அணியின் தோல்விக்கு பவுலிங் பலவீனம் தான் காரணம். தீபக் சாஹர் புதிய பந்தில் நன்றாக ஸ்விங் செய்து வீசக்கூடிய பவுலர். ஆனால் டெத் ஓவர்களில் அவர் எப்போதுமே அதிகமான ரன்களை வாரி வழங்கியிருக்கிறார். குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான நேற்றைய போட்டியிலும் அதைத்தான் செய்தார். ஆல்ரவுண்டர் என்பதால் ரூ.16..25 கோடி கொடுத்து எடுக்கப்பட்ட பென் ஸ்டோக்ஸ் பந்துவீசுமளவிற்கு ஃபிட்னெஸுடன் இல்லாதது பின்னடைவாக அமைந்தது. மற்றொரு ஸ்பின் ஆல்ரவுண்டரான மொயின் அலிக்கு தோனி பவுலிங்கே கொடுக்கவில்லை.
இம்பேக்ட் வீரராக ஃபாஸ்ட் பவுலர் துஷார் தேஷ்பாண்டேவை எடுத்து ஆடவைத்தார் தோனி. ஆனால் அவரும் 3.2 ஓவரில் 51 ரன்களை வாரி வழங்கினார். இம்பேக்ட் பிளேயர் அந்த அணிக்கு இம்பேக்ட்டை கொடுக்காமல் எதிரணிக்கு கொடுத்துவிட்டார்.
இந்நிலையில், இந்த போட்டியில் சிஎஸ்கே அணியின் தோல்விக்கு தோனி கேப்டன்சியில் செய்த சில தவறுகளும் காரணம் என்று வீரேந்திர சேவாக் கூறியுள்ளார்.
இதுகுறித்து பேசிய சேவாக், மிடில் ஓவர்களில் மொயின் அலியை தோனி பயன்படுத்தியிருக்கலாம். மொயின் அலியை மிடில் ஓவர்களில் பயன்படுத்தியிருந்தால் இம்பேக்ட் பிளேயராக துஷார் தேஷ்பாண்டேவை பயன்படுத்த வேண்டிய அவசியமே இருந்திருக்காது. துஷார் தேஷ்பாண்டே அதிகமான ரன்களை வழங்கிவிட்டார். தோனி இதுமாதிரியான தவறுகளை செய்வார் என்பதை நினைத்துக்கூட பார்க்கமுடியாது. ஆஃப் ஸ்பின்னரை வலது கை பேட்ஸ்மேன்களுக்கு எதிராக பந்துவீசவைத்தால் சில சர்ப்ரைஸ்கள் கிடைக்கும். ரிஸ்க் எடுப்பது சில நேரங்களில் பலன் கொடுக்கும்.
இம்பேக்ட் பிளேயராக துஷார் தேஷ்பாண்டேவை எடுத்து புதிய பந்தை கொடுத்தது எனக்கு சர்ப்ரைஸ் தான். உள்நாட்டு போட்டிகளில் மிடில் ஓவர்களில் பந்துவீசும் பவுலர் அவர். ராஜ்வர்தன் ஹங்கர்கேகரிடம் தான் புதிய பந்தை கொடுப்பார்கள் என்று நினைத்தேன் என்றார் சேவாக்.