இந்திய கிரிக்கெட் வீரர் கேஎல் ராகுல் மற்றும் அதியா ஷெட்டிக்கு இன்று திருமணம் நடந்த நிலையில், வரும் ஐபிஎல் சீசன் முடிந்த பிறகு இருவருக்கும் திருமண வரவேற்பு நடக்கும் என்று சுனில் ஷெட்டி தெரிவித்துள்ளார்.

கடந்த 5 வருடங்களாக காதலித்து வந்த கேஎல் ராகுல் மற்றும் அதியா ஷெட்டி இருவரும் இன்று பெற்றோர்களது தலைமையில் திருமணம் செய்து கொண்டனர். மகாராஷ்டிரா மாநிலம் கண்டாலாவில் உள்ள சுனில் ஷெட்டிக்கு சொந்தமான விருந்தினர் மாளிகையில் நடந்த அவர்களது திருமண நிகழ்ச்சிக்கு ஏராளமான சினிமா பிரபலங்கள் மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.

அதியா ஷெட்டி திருமணத்திற்கு வந்த மீடியா நண்பர்களுக்கு இனிப்பு வழங்கிய சுனில் ஷெட்டி மற்றும் ஆஹான் ஷெட்டி!

அவர்கள் யார் யார் என்று கேட்டால், கிருஷ்ணா ஷெராஃப், டயானா பென்டி, அனுஷ்கா ரஞ்சனா மற்றும் அவரது கணவர் ஆதித்யா சீல் மற்றும் அன்சுல் கபூர் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். இவர்களைத் தொடர்ந்து இஷாந்த் சர்மா மற்றும் வருண் ஆரோன் ஆகிய கிரிக்கெட் பிரபலங்களும் கலந்து கொண்டுள்ளனர். திருமணத்திற்கு முன்னதாக கேஎல் ராகுல் வீடு வண்ண விளங்குகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மாஸாக நடந்த கேஎல் ராகுல் அதியா ஷெட்டி திருமண நிகழ்ச்சியிக்கு யாரெல்லாம் வந்திருந்து வாழ்த்தினார்கள் தெரியுமா?

அதியா ஷெட்டி கேஎல் ராகுல் திருமணத்திற்கு வந்திருந்த மீடியா மற்றும் பத்திரிக்கை அன்பர்களுக்கு நடிகர் சுனில் ஷெட்டி மற்றும் அவரது மகன் ஆஹான் ஷெட்டி ஆகியோர் இனிப்பு வழங்கி அவர்களை சந்தோஷப்படுத்தியுள்ளனர். இதற்கு முன்னதாக நேற்றே வந்த அவர்களுக்கு எல்லா வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து கேட்டறிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணத்திற்குப் பிறகு கணவன் மனைவியாக போஸ் கொடுக்கும் கேஎல் ராகுல் அதியா ஷெட்டி!

இந்த நிலையில், மகள் அதியா ஷெட்டி மற்றும் இந்திய கிரிக்கெட் வீரர் கேஎல் ராகுலின் திருமணம் பிரமாண்டமாக முடிந்த நிலையில், மகளின் திருமணத்திற்காக பாரம்பரிய உடையணிந்திருந்த சுனில் ஷெட்டி தான் அதிகாரப்பூர்வமாக மாமனார் ஆகிவிட்டதாக கூறியுள்ளார். ஆனால், மாமனார் என்ற ஒரு பொறுப்பைவிட அப்பா என்ற உறவு தான் மிகவும் நல்லது. ஏனென்றால் இதுவரையில் அந்த பொறுப்பை தான் நான் நன்றாக நிறைவேற்றுகிறேன் என்று கூறியுள்ளார்.

கேஎல் ராகுலின் தனிப்பட்ட வாழ்க்கை ரகசியத்தை சொல்லும் டாட்டூஸ்!

அதுமட்டுமின்றி கேஎல் ராகுல் மற்றும் அதியா ஷெட்டி இருவருக்கும் நல்லபடியாக திருமணம் முடிந்த நிலையில், திருமணம் வரவேற்பு குறித்து முக்கியமான தகவலையும் அனைவருக்கும் தெரியப்படுத்தியுள்ளார். அதாவது, வரும் மார்ச் 1 ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரையில் 16ஆவது ஐபிஎல் போட்டி நடக்க இருக்கிறது. இந்த சீசன் முடிந்த பிறகு இருவருக்கும் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

ரிஷப் பண்ட் திரும்ப வருவது முக்கியம்: மகாகாலேஸ்வரர் கோயிலில் வேண்டிக் கொண்டு பிரார்த்தனை செய்த இந்திய வீரர்கள்

தற்போது நியூசிலாந்து தொடரில் திருமணம் காரணமாக ஓய்வில் இருக்கும் கேஎல் ராகுல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் கேஎல் இடம் பெற்றுள்ளார். ஆதலால், வரும் பிப்ரவரி 9 ஆம் தேதி நாக்பூரில் தொடங்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அவர் விளையாட இருக்கிறார். இந்தப் போட்டியை அவரது மனைவி அதியா ஷெட்டி மற்றும் மாமனார் சுனில் ஷெட்டி ஆகியோர் நேரில் கண்டு ரசிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கே.எல்.ராகுலின் மனைவியாகும் அதியா ஷெட்டி யார்? பாலிவுட் நடிகருக்கும் அவருக்கும் என்ன தொடர்பு?