Asia Cup 2023, Sri Lanka vs Bangladesh: விராட் கோலிக்கு சில்வர் பேட் பரிசாக கொடுத்த இலங்கை கிரிக்கெட் வீரர்!
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலிக்கு இலங்கை கிரிக்கெட் வீரர் சில்வர் பேட் ஒன்றை பரிசாக கொடுத்துள்ளார்.
இலங்கை மற்றும் பாகிஸ்தானில் ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில், லீக் போட்டிகள் முடிந்த நிலையில், தற்போது சூப்பர் 4 சுற்று போட்டிகள் நடந்து வருகிறது. இதில், பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் மற்றும் இந்தியா ஆகிய 4 அணிகள் இடம் பெற்று விளையாடி வருகின்றன. நடந்து முடிந்த முதல் சூப்பர் 4 சுற்று போட்டியில் பாகிஸ்தான் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ENG vs NZ: ராகுல் டிராவிட் விராட் கோலி சாதனையை முறியடித்த டெவான் கான்வே – டேரில் மிட்செல் ஜோடி!
இதையடுத்து 2ஆவது சூப்பர் 4 சுற்று போட்டி இன்று பிற்பகல் 3 மணிக்கு கொழும்பு மைதானத்தில் நடக்க இருக்கிறது. இந்தப் போட்டியில் இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் மோதுகின்றன. நாளை இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான 3ஆவது சூப்பர் 4 சுற்று போட்டி நடக்க இருக்கிறது. சூப்பர் 4 சுற்று போட்டிகள் கொழும்பு மைதானத்தில் நடக்கும் நிலையில், மழை காரணமாக சூப்பர் 4 சுற்று போட்டிகள் ரத்து செய்யப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. எனினும் இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியானது மழையால் பாதிக்கப்பட்டால் ரிசர்வ் டே என்று சொல்லப்படும் அடுத்த நாள் போட்டி மீண்டும் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தான் சுப்பர் 4 சுற்று போட்டிக்காக இந்தியா மற்றும் இலங்கை வீரர்கள் நேற்று கொழும்பு மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டனர். அப்பொது, வளர்ந்து வரும் இளம் இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு விராட் கோலி சில ஆலோசனைகளை வழங்கியுள்ளார். அதில், திறமை மற்றும் உடல் தகுதி குறித்தும் பேசியிருக்கிறார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது ஒரு புறம் இருக்க இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் விராட் கோலிக்கு சில்வர் பேட் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.