US Open Mens Doubles Final 2023: யுஎஸ் ஓபன் டென்னிஸ்: இறுதிப் போட்டியில் ரோகன் போபண்ணா ஜோடி அதிர்ச்சி தோல்வி!

அமெரிக்க ஓபன் டென்னிஸ் இறுதிப் போட்டியில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் போபண்ணா ஜோடி அதிர்ச்சி தோல்வி அடைந்து 2ஆவது இடம் பிடித்தது.

Indo Australian pair of Rohan Bopanna and Matthew Ebden lost in US Open 2023 Mens Doubles Final 2023 rsk

நியூயார்க்கில் அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது. இதில், ஆண்களுக்கான இரட்டையர் பிரிவின் இறுதிப் போட்டி நேற்று நடந்தது. இதில், இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டென் ஜோடியானது, அமெரிக்காவின் ராஜீவ் ராம், ஜோ சாலிஸ்பெரி ஜோடியை எதிர்கொண்டது.

World Cup Golden Ticket: கோல்டன் டிக்கெட் என்றால் என்ன? உலகக் கோப்பை கிரிக்கெட்டில் யாருக்கு அது வழங்கப்படும்?

இதில் முதல் செட்டை ரோகன் போபண்ணா ஜோடியானது 6-2 என்ற கணக்கில் கைப்பற்றியது. அதன் பிறகு சுதாரித்துக் கொண்ட ராஜீம் ஆம் ஜோடியானது, 6-3, 6-4 என்று அடுத்தடுத்து கைப்பற்றியது. இறுதியில் 2-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. 13 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய ரோகன் போபண்ணா இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்து வெளியேறியது அதிர்ச்சி அளிக்கிறது.

SL vs BAN: 2ஆவது சூப்பர் 4 சுற்று போட்டியில் இலங்கை– வங்கதேசம் பலப்பரீட்சை: மழையால் பாதிக்கப்படுமா?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios