நடிகை அவ்னீத் கவுருடன் சுற்றுலா சென்ற சுப்மன் கில் – வைரலாகும் புகைப்படம்!
நடிகை அவ்னீத் கவுர் மற்றும் சுப்மன் கில் இருவரும் லண்டனில் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உலகக் கோப்பை தொடரில் இடம் பெற்ற இந்திய அணி வீரர்களான விராட் கோலி, ரோகித் சர்மா, கேஎல் ராகுல், சுப்மன் கில், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, ஜஸ்ப்ரித் பும்ரா, குல்தீப் யாதவ், முகமது சிராஜ் என்று அனைவரும் ஓய்வில் இருக்கின்றனர். இதில், இஷான் கிஷான், ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி20 தொடரில் இடம் பெற்று விளையாடினர்.
இதைத் தொடர்ந்து தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் சுப்மன் கில், இஷான் கிஷான், ஷ்ரேயாஸ் ஐயர், ரவீந்திர ஜடேஜா, முகமது சிராஜ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், குல்தீப் யாதவ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் விராட் கோலி, ரோகித் சர்மா, சுப்மன் கில், இஷான் கிஷான், ரவிச்சந்திரன் அஸ்வின், கேஎல் ராகுல், முகமது சிராஜ், ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது ஷமி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
T20I Player Rankings – ருதுராஜ் கெய்க்வாட் 7ஆவது இடம், ரவி பிஷ்னோய் 5ஆவது இடத்திற்கு முன்னேற்றம்!
உலகக் கோப்பை தொடரை முடிந்த ரோகித் சர்மா மும்பை திரும்பிய நிலையில், சுப்மன் கில் லண்டன் சென்றுள்ளார். அங்கு அவர் நடிகை அவ்னீத் கவுருடன் இருக்கும் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சுப்மன் கில் மற்றும் இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா இருவரும் காதலித்து வருவதாக சமூக வலைதளங்களில் தொடர்ந்து செய்திகள் வெளியாகி வந்தன.
மேலும், உலகக் கோப்பையில் சுப்மன் கில் பேட்டிங் செய்யும் போது பவுண்டரி, சிக்ஸ் அடிக்கும் போதெல்லாம் கை தட்டி உற்சாகம் செய்துள்ளார். இந்த நிலையில், தற்போது அவ்னீத் கவுருடன் லண்டனில் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவருடன் தயாரிப்பாளரும், நடிகருமான ராகவ் சர்மாவும் இருக்கிறார். அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் 17ஆவது ஐபிஎல் சீசனில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார்.
குஜராத் டைட்டன்ஸ் அணியின் முதல் சீசனில் டைட்டில் பெற்றுக் கொடுத்த ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சென்ற நிலையில் அவருக்குப் பதிலாக சுப்மன் கில் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
IPL 2024 Auctioneer: முதல் முறையாக ஐபிஎல் 2024 ஏலத்தை நடத்தும் மல்லிகா சாகர்!