Dhaka Test: பந்தை கையால் தடுத்து வித்தியாசமான முறையில் தானாகவே ஆட்டமிழந்த வங்கதேச வீரர் முஷ்பிகுர் ரஹீம்!

நியூசிலாந்திற்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் வங்கதேச வீரர் முஷ்பிகுர் ரஹீம் பந்தை கையால் தடுத்து வித்தியாசமான முறையில் ஆட்டமிழந்துள்ளார்.

Bangladesh Player Mushfiqur Rahim becomes the first batter to be dismissed for handling the ball against New Zealand in 2nd Test at Dhaka rsk

வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நியூசிலாந்து அணி தற்போது 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி 150 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான 2ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் தொடர் இன்று தொடங்கியது. இதில், டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி மஹ்முதுல்லா ஹசன் ஜாய் மற்றும் ஜாகீர் ஹாசன் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இருவருமே சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து வந்த கேப்டன் நஜ்முல் ஹூசைன் ஷாண்டோ 9 ரன்களில் ஆட்டமிழந்தார்.

T20I Player Rankings – ருதுராஜ் கெய்க்வாட் 7ஆவது இடம், ரவி பிஷ்னோய் 5ஆவது இடத்திற்கு முன்னேற்றம்!

இவரைத் தொடர்ந்து மமினுல் ஹக் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து முஷ்பிகுர் ரஹீம் மற்றும் ஷஹாதத் ஹூசைன் இருவரும் ஜோடி நிதானமாக விளையாடினர். இதில், முஷ்பிகுர் ரஹீம் 83 பந்துகளில் 3 பவுண்டரி ஒரு சிக்ஸ் உள்பட 35 ரன்களில் ஆட்டமிழந்தார். பந்தை தனது கையால் தொட்ட நிலையில், obs (Obstructing the field - களத்தை தடுத்தல்) என்ற முறையில் ஆட்டமிழந்தார். அதாவது, போட்டியின் 41ஆவது ஓவரை கைல் ஜேமிசன் வீசினார். அந்த ஓவரின் 4ஆவது பந்தை எதிர்கொண்ட முஷ்பிகுர் ரஹீம் தடுத்தார். பந்து பேட்டில் பட்டு ஸ்டெம்பிற்கு வருகிறது என்று நினைத்து பந்தை தனது கையால் தடுத்துள்ளார்.

ஜிம் உடற்பயிற்சி புகைப்படங்களை பகிர்ந்த ரிங்கு – ஆர்ம்ஸை காட்டி போஸ் கொடுத்த ஜித்தேஷ், அர்ஷ்தீப் சிங்!

இதன் காரணமாக நியூசிலாந்து வீரர்கள் அப்பீல் செய்யவே கள நடுவர், மூன்றாவது நடுவரிடம் முறையிட அவரும் உடனடியாக அவுட் கொடுத்தார். முதல் முறையாக வங்கதேச வீரர் பந்தை தனது கையால் தடுத்த நிலையில் சர்ச்சைக்குரிய முறையில் ஆட்டமிழந்துள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கிரிக்கெட் விளையாட்டில் ஒரு பேட்ஸ்மேனை ஆட்டமிழக்க வைக்கும் ஒன்பது முறைகளில் களத்தை தடுப்பதும் ஒன்றாகும். இந்த முறையில் தான் தற்போது வங்கதேச வீரர் முஷ்பிகுர் ரஹீம் ஆட்டமிழந்துள்ளார். தற்போது வரையில் வங்கதேச அணியானது 6 விக்கெட்டுகளை இழந்து 128 ரன்கள் மட்டுமே எடுத்து விளையாடி வருகிறது.

Mushfiqur Rahim was given out for obstructing the field..He was handling the ball during Jamieson's over pic.twitter.com/ZpWgOIj4KA

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios