இந்திய அணியின் இளம் நட்சத்திர வீரர்களான ரிங்கு, சிங், ஜித்தேஷ் சர்மா, அர்ஷ்தீப் சிங் ஆகியோர் ஜிம்மில் உடற்பயிற்சி செய்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான டி20 தொடரில் இந்திய அணியில் இடம் பெற்று விளையாடியவர்கள் ரிங்கு சிங், அர்ஷ்தீப் சிங், ஜித்தேசர்மா. ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இந்த டி20 தொடரில் இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டவர்களின் பட்டியலில் இந்த மூவரும் இடம் பெற்றுள்ளனர்.
இந்த தொடரில் 5 போட்டிகளில் 4 இன்னிங்ஸில் விளையாடிய ரிங்கு சிங் 105 ரன்கள் எடுத்தார். ஜித்தேஷ் சர்மா கடைசி 2 போட்டிகளில் விளையாடி 35, 24 என்று மொத்தமாக 59 ரன்கள் எடுத்தார். பவுலிங்கில் 4 போட்டிகளில் விளையாடிய அர்ஷ்தீப் சிங் 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார். இதன் காரணமாக ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 5 போட்டிகள் டி20 தொடரை இந்திய அணி 4-1 என்று கைப்பற்றியது.
இதன் மூலமாக தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 தொடரில் அர்ஷ்தீப் சிங், ஜித்தேஷ் சர்மா, ரிங்கு சிங் ஆகிய மூவரும் அணியில் இடம் பெற்றுள்ளனர். ஆனால், ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் ஜித்தேஷ் சர்மா இடம் பெறவில்லை. டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இந்த மூவருமே இடம் பெறவில்லை. ஜித்தேஷ் சர்மாவிற்குப் பதிலாக ஒரு நாள் தொடருக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சன் இடம் பெற்றுள்ளார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
இந்த நிலையில் தான் ரிங்கு சிங் தனது ஜிம் ஒர்க் அவுட் புகைப்படங்களை தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார். அதில், அர்ஷ்தீப் சிங், ரிங்கு சிங் மற்றும் ஜித்தேஷ் சர்மா ஆகியோர் தனது ஆர்ம்ஸை (Arms) காட்டும் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளது. தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான 3 டி20, 3 ஒருநாள் கிரிக்கெட் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்கான இந்திய அணி வீரர்கள் நேற்று தென் ஆப்பிரிக்கா புறப்பட்டுச் சென்றனர். இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி வரும் 10 ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. மற்ற 2 டி20 போட்டிகள் இரவு 8.30 மணிக்கு தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
