மூளை பக்கவாதத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தந்தை: தென் ஆப்பிரிக்கா தொடரிலிருந்து தீபக் சாஹர் விலகல்?
தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்றுள்ள தீபக் சாஹர் தனது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தென் ஆப்பிரிக்கா தொடரிலிருந்து விலக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Deepak Chahar Dad
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4ஆவது டி20 போட்டியில் தீபக் சாஹர் அணியில் இடம் பெற்றார். இதில், அவர் 4 ஓவர்கள் பந்து வீசி 2 விக்கெட்டுகள் கைப்பற்றி 44 ரன்கள் விட்டுக் கொடுத்தார். ஆனால், 5ஆவது டி20 போட்டியில் தீபக் சாஹர் அணியில் இடம் பெறவில்லை. இது குறித்து போட்டியில் டாஸ் போடும் நிகழ்வின் போது பேசிய சூர்யகுமார் யாதவ், மருத்துவ அவசர சிகிச்சைக்காக அவர் வீட்டிற்கு திரும்பியதாக கூறினார்.
Deepak Chahar Father
இந்த நிலையில் தான், தீபக் சாஹரின் தந்தை மூளை பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தீபக் சாஹரின் தந்தை லோகேந்திர சிங் சாஹருக்கு மூளை பக்கவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
eepak Chahar Dad Hospitalised
இதன் காரணமாக ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 5ஆவது டி20 போட்டியில் பங்கேற்காமல் பெங்களூருவிலிருந்து விமானம் மூலமாக டெல்லி சென்று அதன் பிறகு அங்கிருந்து அலிகார் சென்றுள்ளார். தற்போது லோகேந்திர சிங் சாஹருக்கு தீவிர அவசர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Lokendra Singh Suffered Brain Stroke
இது தொடர்பாக தீபக் சாஹர் கூறியிருப்பதாவது: உரிய நேரத்தில் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆதலால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. எனினும், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
Deepak Chahar
நான் கிரிக்கெட் விளையாட காரணமே எனது தந்தை தான். ஆதலால், கிரிக்கெட்டை விட எனது தந்தை தான் முக்கியம் என்று 5ஆவது போட்டியில் விளையாடாமல் வந்துவிட்டேன். தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் எனது தந்தையின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்ட பின்பு தான் தென் ஆப்பிரிக்கா தொடரில் பங்கேற்பது குறித்து முடிவு செய்யப்படும். இது குறித்து தேர்வுக் குழு மற்றும் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டிடம் பேசியதாக கூறியுள்ளார்.