47 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 36 மணி நேரத்துக்கும் மேல் கொட்டி தீர்த்த பெருமழையால் தலைநகர் சென்னையை தலைகீழாக புரட்டிபோட்டது. எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாகவே காட்சியளித்தது.
இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளரும், தமிழகத்தை சேர்ந்தவருமான அஸ்வின் மிக்ஜாம் புயல் காரணமாக தங்களின் பகுதியில் 30 மணி நேரத்துக்கும் மேலாக மின்சாரம் இல்லை என வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இரண்டு நாட்கள் இடைவிடாமல் பலத்த காற்றுடன் அதீகனமழை பெய்தது. 47 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 36 மணி நேரத்துக்கும் மேல் கொட்டி தீர்த்த பெருமழையால் தலைநகர் சென்னையை தலைகீழாக புரட்டிபோட்டது. எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாகவே காட்சியளித்தது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
![]()
இதையும் படிங்க;- சென்னையில் மின் விநியோகம் வழங்குவதில் தாமதம் ஏற்படுவதற்கு இதுதான் காரணம்! அமைச்சர் தங்கம் தென்னரசு !
அடுக்கு மாடி குடியிருப்பு உள்ளிட்ட அனைத்து இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியது. இந்நிலையிலும் கனமழை காரணமாக எந்த அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்க பொதுமக்கள் நலன் கருதி பல்வேறு இடங்களில் மின்தடை செய்யப்பட்டது. மழையின் தாக்கம் குறைந்ததை அடுத்து சென்னை படிப்படியாக மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. ஒரு சில இடங்களில் மழை நீர் தேங்கியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு காரணங்களால் மின் விநியோகம் சீரமைப்பதில் தாமதம் ஏற்பட்டு வருவதாக அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியிருந்தார்.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் எங்களுடைய பகுதியிலும் 30 மணி நேரத்திற்கு மேலாக மின்சாரம் இல்லை என கூறியுள்ளார். இதுகுறித்து அஸ்வின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்;- எனது பகுதியில் 30 மணி நேரத்துக்கும் மேலாக மின்சாரம் இல்லை. பல்வேறு இடங்களில் இப்படித்தான் இருக்கும் என நினைக்கிறேன். நமக்கு வேறு வழி என்ன இருக்கிறது என உறுதியாக தெரியவில்லை என அஸ்வின் தெரிவித்துள்ளார்.
