Asianet News TamilAsianet News Tamil

அழகான 2022 ஆம் ஆண்டு நினைவுகளுக்கு நன்றி - ஷிகர் தவான்!

என் வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்திற்கும் நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன் என்று இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஷிகர் தவான் தெரிவித்துள்ளார்.

Shikhar Dhawan recall his 2022 year fun, love, learnings and analysis
Author
First Published Jan 1, 2023, 9:11 AM IST

2023 ஆம் ஆண்டு அடியெடுத்து வைத்துள்ள நிலையில், கடந்த ஆண்டை நினைவு கூறும் வகையில், இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஷிகர் தவான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது: என் வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்திற்கும் நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். கேளிக்கை, காதல், கற்றுக் கொள்ளுதல் மற்றும் ஆராய்தல் ஆகியவை நிறைந்த அழகான 2022ஆம் ஆண்டின் நினைவுகளுக்கு நன்றி என்று பதிவிட்டுள்ளார்.

இன்னும் 3 தான் பாக்கி: 2023 நியூ இயரில் சாதிக்க காத்திருக்கும் ரஷீத் கான்!

வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணியில் இடம் பெற்றிருந்த ஷிகர் தவான் ஒரு போட்டியில் கூட சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. மாறாக இந்திய கேப்டன் ரோகித் சர்மா காயம் காரணமாக 3ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியில் பங்கேற்கவில்லை. அவருக்குப் பதிலாக அணியில் இடம் பிடித்த இஷான் கிஷான் அதிரடியாக ஆடி இரட்டை சதம் குவித்தார். 131 பந்துகளில் 10 சிக்சர்கள், 24 பவுண்டரிகள் உள்பட 210 ரன்கள் அடித்து தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதுமட்டுமின்றி இளம் வயதில் இரட்டை சதம் அடித்த வீரர் என்ற பெருமையையும் இஷான் கிஷான் படைத்துள்ளார்.

2022 ஆம் ஆண்டில் அதிக ரன்கள் குவித்தவர்களின் பட்டியலில் பாபர் அசாம் நம்பர் 1 இடம்!

இதன் காரணமாக இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை அணிக்கு எதிரான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரிலும், 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரிலும் இஷான் கிஷானுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இலங்கை அணிக்கு எதிரான தொடரில் ரிஷப் பண்ட் மற்றும் ஷிகர் தவான் ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இலங்கை அணிக்கு எதிரான டி20 போட்டிகள் கொண்ட தொடருக்கு ஹர்திக் பாண்டியா கேப்டனாகவும், சூர்யகுமார் யாதவ் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

2022 ஆம் ஆண்டில் நம்பர் 1 இடம்: டி20 போட்டிகளில் கில்லாடி சூர்யகுமார் யாதவ்!

டி20 போட்டிகளில் ரோகித் சர்மா, விராட் கோலி, கே எல் ராகுல் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடருக்கு ரோகித் சர்மா கேப்டனாகவும், ஹர்திக் பாண்டியா துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

2022 ஆம் ஆண்டில் டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்த கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட்: பிசிசிஐ ரிப்போர்ட்!

 

 

Follow Us:
Download App:
  • android
  • ios