Asianet News TamilAsianet News Tamil

2022 ஆம் ஆண்டில் டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்த கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட்: பிசிசிஐ ரிப்போர்ட்!

கடந்த 2022 ஆம் ஆண்டில் 7 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய ரிஷப் பண்ட் 680 ரன்கள் குவித்து டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்த கிரிக்கெட் வீரர் என்பதை நிரூபித்துள்ளார்.
 

Indian Wicket Keeper Rishabh Pant is best Player at Team India Top performance in test cricket in 2022
Author
First Published Dec 31, 2022, 5:52 PM IST

வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 3 ஒரு நாள் போட்டியிலும், 2 டெஸ்ட் போட்டியிலும் விளையாடியது. இதில், டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் இடம் பிடித்திருந்தார். முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 46 ரன்கள் எடுத்த ரிஷப் பண்ட், 2 ஆவது இன்னிங்ஸில் களமிறங்கவில்லை. 2ஆவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 93 ரன்கள் சேர்த்து தனது சதத்தை கோட்டை விட்டார். வெற்றிக்கு முக்கியமான 2ஆவது இன்னிங்ஸில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரிஷப் பண்ட் வெறும் 9 ரன்களில் வெளியேறினார்.

ஷ்ரேயாஸ் ஐயர் நம்பர் 1: அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் சரிவடைந்த விராட் கோலி!

கடைசியாக அஸ்வின் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றது. இதன் மூலம் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

கடந்த 2022 ஆம் ஆண்டில் மட்டும் இந்திய அணி:

ஜனவரி மாதம்:

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 3 டெஸ்ட் போட்டி, 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது.

பிப்ரவரி மாதம்:

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 3 டி20 போட்டி மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது.

காயம் ரொம்ப சாஸ்தி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் ரிஷப் பண்ட் விளையாடுவது சந்தேகம் தான்!

பிப்ரவரி - மார்ச் மாதம்

இலங்கைக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது.

மார்ச் மாதம்:

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது.

மார்ச் மாதம்:

நியூசிலாந்து அணிக்கு எதிராக 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாடியது.

ஜூன் மாதம்:

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாடியது.

ஜூலை 2022:

கடந்த ஆண்டு பாதியில் நிறுத்தப்பட்ட டெஸ்ட் போட்டி, இந்த ஆண்டில் நடந்தது. இதைத் தொடர்ந்து, 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 3 டி20 கொண்ட தொடரில் பங்கேற்றது.

ரிஷப் பண்ட் மூளை & முதுகுத்தண்டு MRI ஸ்கேன் ரிப்போர்ட்..! எந்த பிரச்னையும் இல்லை.. ரசிகர்கள் நிம்மதி

ஆகஸ்ட் 2022:

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரிலும், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரிலும் இந்திய அணி விளையாடியது.

ஆகஸ்ட் 2022:

ஜிம்பாப்வே அணிக்கு எதிராக இந்திய அணி 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது.

ஆகஸ்ட் - செப்டம்பர் - ஆசியக் கோப்பை:

கடந்த 2022 ஆம் ஆண்டு ஆசியக் கோப்பையை இலங்கை அணி தட்டிச் சென்றது.

செப்டம்பர் 2022:

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாடியது.

செப்டம்பர் - அக்டோபர்:

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட தென் ஆப்பிரிக்கா அணி 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரிலும், 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரிலும் பங்கேற்றது.

கவனமாக கார் ஓட்டுடா தம்பி.. 3 ஆண்டுக்கு முன்பே ரிஷப் பண்ட்டை எச்சரித்த ஷிகர் தவான்..! வைரல் வீடியோ

டி20 உலகக் கோப்பை:

நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பையை இங்கிலாந்து அணி கைப்பற்றியது.

நவம்பர் - டிசம்பர்:

வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரிலும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரிலும் பங்கேற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2022 ஆம் ஆண்டில் மட்டும் இந்திய அணி கிட்டத்தட்ட 7 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில், இந்திய அணியின் விக்கெட் கீப்பர் 7 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று மொத்தமாக 680 ரன்கள் வரையில் எடுத்துள்ளார். அதிகபட்சமாக 146 ரன்கள் எடுத்துள்ளார். இதில், 4 முறை அரை சதமும், 2 முறை சதமும் அடித்துள்ளார்.

இதே போன்று பவுலிங்கில் இந்திய கிரிக்கெட் அணியின் ஜஸ்ப்ரித் பும்ரா 5 போட்டிகளில் பங்கேற்று 22 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். இதில், சிறந்தது 24 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகள் கைப்பற்றியது தான். 2 முறை 5 விக்கெட்டுகள் கைப்பற்றியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

விபத்துக்குள்ளான ரிஷப் பண்ட்..! பண்ட்டின் தாயாரிடம் அக்கறையுடன் நலம் விசாரித்த பிரதமர் மோடி

இதைத் தொடர்ந்து ஒரு நாள் போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் முதலிடம் பிடித்துள்ளார். 17 போட்டிகளில் பங்கேற்றுள்ள ஷ்ரேயாஸ் ஐயர் 724 ரன்கள் எடுத்துள்ளார். இதில் அதிகபட்சமாக 113 ரன்கள் எடுத்திருக்கிறார். 6 முறை அரைசதமும், ஒரு முறை சதமும் அடித்துள்ளார். பந்து வீச்சில் முகமது சிராட் சிறந்து விளங்கியுள்ளார். 15 போட்டிகளில் 24 விக்கெட்டுகள் கைப்பற்றியிருக்கிறார். 29 ரன்கள் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகள் கைப்பற்றியது தான் சிறந்ததாக கருதப்படுகிறது.

டி20 பார்மேட்டில் இந்தியாவின் மிஸ்டர் 360 டிகிரி என்று அழைக்கப்படும் சூர்யகுமார் யாதவ் சிறந்து விளங்கியுள்ளார். 31 போட்டிகளில் 1164 ரன்கள் எடுத்துள்ளார். அதிகபட்சமாக 117 ரன்கள் எடுத்துள்ளார். 9 முறை அரைசதமும், ஒரு முறை சதமும் விளாசியிருக்கிறார். பந்து வீச்சில் புவனேஸ்வர்குமார் சிறந்தவராக திகழ்கிறார். 32 போட்டிகளில் 37 விக்கெட்டுகள் கைப்பற்றியிருக்கிறார். 4 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகள் கைப்பற்றியது சிறந்த பந்துவீச்சாக கருதப்படுகிறது. 

சபாஷ் சுஷில்.. ரிஷப் பண்ட்டை காப்பாற்றிய பஸ் டிரைவருக்கு ரிவார்ட் வழங்கி கௌரவம்

Follow Us:
Download App:
  • android
  • ios