Asianet News TamilAsianet News Tamil

ஷ்ரேயாஸ் ஐயர் நம்பர் 1: அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் சரிவடைந்த விராட் கோலி!

இந்தியாவுக்காக அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் ஷ்ரேயாஸ் ஐயர் முதலிடம் பிடித்துள்ளார்.

Virat Kohli loss his number one place for most runs for team India
Author
First Published Dec 31, 2022, 4:17 PM IST

வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரிலும், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரிலும் பங்கேற்றது. ஒரு நாள் போட்டிகள் தொடரிலும், டெஸ்ட் தொடரிலும் விராட் கோலி இடம் பெற்றிருந்தார். முதல் இரு ஒரு நாள் போட்டியிலும் சரிவர ஆடாத விராட் கோலி 3ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியில் அதிரடியாக ஆடி 113 ரன்கள் குவித்தார். இதில் 2 சிக்சர்கள், 11 பவுண்டரிகள் அடங்கும். ஆனால், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் மொத்தமாக 45 ரன்கள் மட்டுமே எடுத்து தான் மோசமான பார்மில் இருப்பதை நிரூபித்துள்ளார்.

காயம் ரொம்ப சாஸ்தி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் ரிஷப் பண்ட் விளையாடுவது சந்தேகம் தான்!

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை அணி 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரிலும், 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரிலும் பங்கேற்கிறது. 3 டி20 போட்டிகள் கொண்ட தொடருக்கு ஹர்திக் பாண்டியா கேப்டனாகவும், சூர்யகுமார் யாதவ் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். விராட் கோலி, ரோகித் சர்மா, கே எல் ராகுல் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்த தொடரில் ரிஷப் பண்ட், ஷிகர் தவான் ஆகியோர் இடம் பெறவில்லை. 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விராட் கோலி இடம் பெற்றுள்ளார்.

கவனமாக கார் ஓட்டுடா தம்பி.. 3 ஆண்டுக்கு முன்பே ரிஷப் பண்ட்டை எச்சரித்த ஷிகர் தவான்..! வைரல் வீடியோ

இதே போன்று வரும் பிப்ரவரி மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஆஸ்திரேலியா அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரிலும், 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரிலும் பங்கேற்கிறது. இதற்கான இந்திய அணி இன்னும் அறிவிக்கப்படவில்லை. கடந்த வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விராட் கோலியின் பார்மை வைத்து பார்க்கும் போது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விராட் கோலி விளையாடுவது சந்தேகம் தான்.

ரிஷப் பண்ட் மூளை & முதுகுத்தண்டு MRI ஸ்கேன் ரிப்போர்ட்..! எந்த பிரச்னையும் இல்லை.. ரசிகர்கள் நிம்மதி

இந்த நிலையில், கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர்களில் விராட் கோலி தான் 8 முறை முதலிடம் பிடித்துள்ளார். கடந்த 2015 ஆம் ஆண்டு அஜின்க்யா ரகானே 1352 ரன்களும், 2020 ஆம் ஆண்டு கே எல் ராகுல் 847 ரன்களும், 2021 ஆம் ஆண்டு ரோகித் சர்ம 1420 ரன்களும், 2022 ஆம் ஆண்டு ஷ்ரேயாஸ் ஐயர் 1609 ரன்களும் எடுத்துள்ளனர்.

விபத்துக்குள்ளான ரிஷப் பண்ட்..! பண்ட்டின் தாயாரிடம் அக்கறையுடன் நலம் விசாரித்த பிரதமர் மோடி

2011 ஆம் ஆண்டு - விராட் கோலி - 1644 ரன்கள்
2012 ஆம் ஆண்டு - விராட் கோலி - 2186 ரன்கள்
2013 ஆம் ஆண்டு - விராட் கோலி - 1913 ரன்கள்
2014 ஆம் ஆண்டு - விராட் கோலி - 2286 ரன்கள்
2015 ஆம் ஆண்டு - அஜின்க்யா ரகானே - 1352 ரன்கள்
2016 ஆம் ஆண்டு - விராட் கோலி - 2595 ரன்கள்
2017 ஆம் ஆண்டு - விராட் கோலி - 2818 ரன்கள்
2018 ஆம் ஆண்டு - விராட் கோலி - 2735 ரன்கள்
2019 ஆம் ஆண்டு - விராட் கோலி - 2455 ரன்கள்
2020 ஆம் ஆண்டு - கே எல் ராகுல் - 847 ரன்கள்
2021 ஆம் ஆண்டு - ரோகித் சர்மா - 1420 ரன்கள்
2022 ஆம் ஆண்டு - ஷ்ரேயாஸ் ஐயர் - 1609 ரன்கள்

சபாஷ் சுஷில்.. ரிஷப் பண்ட்டை காப்பாற்றிய பஸ் டிரைவருக்கு ரிவார்ட் வழங்கி கௌரவம்

Follow Us:
Download App:
  • android
  • ios