Asianet News TamilAsianet News Tamil

காயம் ரொம்ப சாஸ்தி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் ரிஷப் பண்ட் விளையாடுவது சந்தேகம் தான்!

இந்தியா வரும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடரில் ரிஷப் பண்ட் விளையாடுவது தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.

Cricket Player Rishabh Pant is doubtful for Australia Test and ODI series against INDIA
Author
First Published Dec 31, 2022, 3:53 PM IST

இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் டெல்லியிலிருந்து ரூர்கேலாவை நோக்கி சென்று கொண்டிருந்த போது ஹரித்வார் மாவட்டம் நார்சன் பகுதியில் வைத்து அவரது மெர்சிடிஸ் பென்ஸ் சொகுசு கார் விபத்துக்குள்ளானது. 90 கிமீ வேகத்தில் சென்ற டிஷப் பண்ட் கண் அயர்ந்து தூங்கியதால், கார் சாலை தடுப்பில் மோதி பலமுறை சுழன்று தீப்பிடித்து எரிந்தது. கார் எரிவதற்குள்ளாக கார் கண்ணாடியை உடைத்து ரிஷப் பண்ட் வெளியேற முயற்சித்துள்ளார்.

சபாஷ் சுஷில்.. ரிஷப் பண்ட்டை காப்பாற்றிய பஸ் டிரைவருக்கு ரிவார்ட் வழங்கி கௌரவம்

அப்போது எதிரே வந்த பேருந்து ஓட்டுனர் மற்றும் அப்பகுதி மக்கள் என்று பலரும் ஒன்று சேர்ந்து ரிஷப் பண்ட்டை காப்பாற்றி அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பலத்த காயங்களுடன் இருந்த ரிஷப் பண்ட்டுக்கு மருத்துவமனையில் வைத்து முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பின்னர் மேல் சிகிச்சைக்காக டேராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நெற்றிப் பகுதியில் ஏற்பட்ட 2 வெட்டுகள் காரணமாக அவருக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டுள்ளது.

கவனமாக கார் ஓட்டுடா தம்பி.. 3 ஆண்டுக்கு முன்பே ரிஷப் பண்ட்டை எச்சரித்த ஷிகர் தவான்..! வைரல் வீடியோ

மேலும், தலை மற்றும் முதுகுப் பகுதியில் எடுக்கப்பட்ட எம் ஆர் ஐ ஸ்கேனில் எந்த பாதிப்பும் இல்லை என்று தெரிய வந்துள்ளது. முழங்கால் மற்றும் கணுக்காலில் காயங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், அதிகமான வலி காரணமாக நேற்று காலில் எம்.ஆர்.ஐ ஸ்கேன் செய்யப்படவில்லை. இன்று ஸ்கேன் செய்யப்படவுள்ளது. இந்த நிலையில், ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடரில் ரிஷப் பண்ட் விளையாடுவது கேள்விக்குறியாகியுள்ளது.

ரிஷப் பண்ட் மூளை & முதுகுத்தண்டு MRI ஸ்கேன் ரிப்போர்ட்..! எந்த பிரச்னையும் இல்லை.. ரசிகர்கள் நிம்மதி

வரும் பிப்ரவரி மாதம் இந்தியா வரும் ஆஸ்திரேலியா அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரிலும், 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரிலும் பங்கேற்கிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்த தொடரில் தான் ரிஷப் பண்ட் பங்கேற்பது என்னவோ கேள்விக்குறியாகியுள்ளது. அவருக்கு ஏற்பட்டுள்ள காயம் காரணமாக குறைந்தது ஒரு வருடம் அவர் ஓய்வு எடுக்கப்பட வேண்டும் என்று தெரிகிறது. ஏற்கனவே இலங்கைக்கு எதிரான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரிலும், 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரிலும் ரிஷப் பண்ட் பெயர் இடம் பெறவில்லை.

விபத்துக்குள்ளான ரிஷப் பண்ட்..! பண்ட்டின் தாயாரிடம் அக்கறையுடன் நலம் விசாரித்த பிரதமர் மோடி

Follow Us:
Download App:
  • android
  • ios