Asianet News TamilAsianet News Tamil

2022 ஆம் ஆண்டில் நம்பர் 1 இடம்: டி20 போட்டிகளில் கில்லாடி சூர்யகுமார் யாதவ்!

கடந்த 2022 ஆம் ஆண்டு நடந்த டி20 போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியவர்களில் சூர்யகுமார் யாதவ் முதலிடம் பிடித்துள்ளார்.

Indian Cricketer Suryakumar Yadav is best player at team India top performance in t20 matches in 2022
Author
First Published Dec 31, 2022, 7:35 PM IST

கடந்த மாதம் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ் இடம் பிடித்திருந்தார். 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. ஆனால், 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரை 1-0 என்ற கணக்கில் இழந்தது. நியூசிலாந்து அணிக்கு எதிரான 2ஆவது ஒரு நாள் போட்டியில் சூர்யகுமார் யாதவ் 51 பந்துகளில் 7 சிக்சர்கள் 11 பவுண்டரிகள் உள்பட 111 ரன்கள் குவித்தார்.

2022 ஆம் ஆண்டில் டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்த கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட்: பிசிசிஐ ரிப்போர்ட்!

இதே போன்று டி20 உலகக் கோப்பையில் நெதர்லாந்து அணிக்கு எதிரான 51 ரன்கள் எடுத்தார். தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக 68 ரன்கள் அடித்தார். ஜிம்பாப்வே அணிக்கு எதிராக நடந்த டி20 போட்டியில் 25 பந்துகளில் 4 சிக்சர்கள் 6 பவுண்டரிகள் உள்பட 61 ரன்கள் எடுத்து அந்தப் போட்டியில் ஆட்ட நாயகன் விருதும் பெற்றார். அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்திடம் தோற்று இந்திய அணி வெளியேறியது.

 

 

கடந்த 2022 ஆம் ஆண்டில் மட்டும் இந்திய அணி:

ஜனவரி மாதம்:

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 3 டெஸ்ட் போட்டி, 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது.

பிப்ரவரி மாதம்:

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 3 டி20 போட்டி மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது.

ஷ்ரேயாஸ் ஐயர் நம்பர் 1: அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் சரிவடைந்த விராட் கோலி!

பிப்ரவரி - மார்ச் மாதம்

இலங்கைக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது.

மார்ச் மாதம்:

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது.

மார்ச் மாதம்:

நியூசிலாந்து அணிக்கு எதிராக 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாடியது.

ஜூன் மாதம்:

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாடியது.

ஜூலை 2022:

கடந்த ஆண்டு பாதியில் நிறுத்தப்பட்ட டெஸ்ட் போட்டி, இந்த ஆண்டில் நடந்தது. இதைத் தொடர்ந்து, 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 3 டி20 கொண்ட தொடரில் பங்கேற்றது.

 

 

ஆகஸ்ட் 2022:

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரிலும், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரிலும் இந்திய அணி விளையாடியது.

ஆகஸ்ட் 2022:

ஜிம்பாப்வே அணிக்கு எதிராக இந்திய அணி 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது.

ஆகஸ்ட் - செப்டம்பர் - ஆசியக் கோப்பை:

கடந்த 2022 ஆம் ஆண்டு ஆசியக் கோப்பையை இலங்கை அணி தட்டிச் சென்றது.

செப்டம்பர் 2022:

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாடியது.

காயம் ரொம்ப சாஸ்தி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் ரிஷப் பண்ட் விளையாடுவது சந்தேகம் தான்!

செப்டம்பர் - அக்டோபர்:

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட தென் ஆப்பிரிக்கா அணி 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரிலும், 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரிலும் பங்கேற்றது.

டி20 உலகக் கோப்பை:

நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பையை இங்கிலாந்து அணி கைப்பற்றியது.

நவம்பர் - டிசம்பர்:

வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரிலும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரிலும் பங்கேற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொடரில் சூர்யகுமார் யாதவ் இடம் பெறவில்லை. மாறாக ரஞ்சி டிராபி கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறார். ரஞ்சி டிராபி தொடரில் மும்பை அணியில் இடம் பெற்றுள்ள சூர்யகுமார் யாதவ் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

டி20 பார்மேட்டில் இந்தியாவின் மிஸ்டர் 360 டிகிரி என்று அழைக்கப்படும் சூர்யகுமார் யாதவ் சிறந்து விளங்கியுள்ளார். 31 போட்டிகளில் 1164 ரன்கள் எடுத்துள்ளார். அதிகபட்சமாக 117 ரன்கள் எடுத்துள்ளார். 9 முறை அரைசதமும், ஒரு முறை சதமும் விளாசியிருக்கிறார். பந்து வீச்சில் புவனேஸ்வர்குமார் சிறந்தவராக திகழ்கிறார். 32 போட்டிகளில் 37 விக்கெட்டுகள் கைப்பற்றியிருக்கிறார். 4 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகள் கைப்பற்றியது சிறந்த பந்துவீச்சாக கருதப்படுகிறது.

கடந்த 2022 ஆம் ஆண்டில் மட்டும் இந்திய அணி கிட்டத்தட்ட 7 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில், இந்திய அணியின் விக்கெட் கீப்பர் 7 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று மொத்தமாக 680 ரன்கள் வரையில் எடுத்துள்ளார். அதிகபட்சமாக 146 ரன்கள் எடுத்துள்ளார். இதில், 4 முறை அரை சதமும், 2 முறை சதமும் அடித்துள்ளார்.

இதே போன்று பவுலிங்கில் இந்திய கிரிக்கெட் அணியின் ஜஸ்ப்ரித் பும்ரா 5 போட்டிகளில் பங்கேற்று 22 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். இதில், சிறந்தது 24 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகள் கைப்பற்றியது தான். 2 முறை 5 விக்கெட்டுகள் கைப்பற்றியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதைத் தொடர்ந்து ஒரு நாள் போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் முதலிடம் பிடித்துள்ளார். 17 போட்டிகளில் பங்கேற்றுள்ள ஷ்ரேயாஸ் ஐயர் 724 ரன்கள் எடுத்துள்ளார். இதில் அதிகபட்சமாக 113 ரன்கள் எடுத்திருக்கிறார். 6 முறை அரைசதமும், ஒரு முறை சதமும் அடித்துள்ளார். பந்து வீச்சில் முகமது சிராட் சிறந்து விளங்கியுள்ளார். 15 போட்டிகளில் 24 விக்கெட்டுகள் கைப்பற்றியிருக்கிறார். 29 ரன்கள் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகள் கைப்பற்றியது தான் சிறந்ததாக கருதப்படுகிறது.

 

 

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை அணி 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரிலும், 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரிலும் பங்கேற்கிறது. 3 டி20 போட்டிகள் கொண்ட தொடருக்கு ஹர்திக் பாண்டியா கேப்டனாகவும், சூர்யகுமார் யாதவ் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். ரோகித் சர்மா, விராட் கோலி, கே எல் ராகுல் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதே போன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடருக்கு ரோகித் சர்மா கேப்டனாகவும், ஹர்திக் பாண்டியா துணை கேப்டனாகவும் செயல்படுகின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios