ஐபிஎல்லில் 701 பவுண்டரிகள், 136 சிக்சர்கள் அடித்து நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் ஷிகர் தவான்!
இந்திய அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்ட ஷிகர் தவான் தான் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவில் அதிக பவுண்டரிகள் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
பிசிசிஐ மூலமாக கடந்த 2008 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட கிரிக்கெட் திருவிழா தான் ஐபிஎல். இந்தியன் பிரீமியர் லீக் என்று சொல்லப்படும் இந்த திருவிழா ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான 16ஆவது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா வரும் 31 ஆம் தேதி பிரம்மாண்டமாக ஆரம்பமாகிறது. இந்த சீசனின் முதல் போட்டியிலேயே நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன.
கையில் சுரைக்காயோடு எண்ட்ரி கொடுத்து தத்துவம் பேசிய லாக்கி ஃபெர்குசன் - வைரலாகும் வீடியோ!
இது ஒரு புறம் இருக்க, கடந்த 1985 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி டெல்லியில் பிறந்தவர் அதிரடி வீரர் ஷிகர் தவான். இந்திய அணியின் ஒரு நாள் போட்டியை கூட வழிநடத்தியுள்ளார். 38 வயதான ஷிகர் தவான், கடந்த 2008 ஆம் தொடங்கப்பட்ட ஐபிஎல் தொடரின் மூலமாக அறிமுகமானார். இதுவரையில், 206 போட்டிகளில் விளையாடிய ஷிகர் தவான், 6244 ரன்கள் வரையில் குவித்துள்ளார். இதில், 2 சதமும், 47 அரைசதங்களும் அடங்கும். அதிகபட்சமாக 106 ரன்கள் எடுத்து அவுட்டாகாமலும் இருந்துள்ளார்.
புதிய ஐபிஎல் அணியில் இணைய போவதாக அறிவிப்பு - வீடியோ வெளியிட்டு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஸ்டீவ் ஸ்மித்!
கடந்த 2008 ஆண்டு தொடங்கப்பட்ட ஐபிஎல் திருவிழாவில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியில் இடம் பெற்று விளையாடினார். அதன் பிறகு 2009 மற்றும் 2010 ஆம் ஆண்டுகளில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடினார். இதைத் தொடர்ந்து 2011 முதல் 2012 ஆம் ஆண்டு வரையில் டெக்கான் சார்ஜஸ் அணிக்காக விளையாடிய ஷிகர் தவான், 2013 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரையில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இடம் பெற்று விளையாடியுள்ளார்.
ரோகித் சர்மாவின் நிகர சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
இதையடுத்து 2019 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரையில் டெல்லி கேபிடல்ஸ் அணியில் இடம் பெற்றார். அதன் பிறகு தான் 2022 ஆம் ஆண்டு பஞ்சாப் அணிக்காக விளையாடினார். இந்த ஆண்டும் பஞ்சாப் அணிக்காக விளையாடுகிறார். கடந்த ஆண்டு ரூ.8.25 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட ஷிகர் தவான், இந்த ஆண்டும் ரூ.8.25 கோடிக்கே ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
குண்டா இருக்க, போய் சாப்பிடு; பாகிஸ்தான் வீரரை சைகையால் உருவ கேலி செய்த ரசிகர்; வைரலாகும் வீடியோ!
2008 - டெல்லி டேர்டெவில்ஸ்
2000 - 2010 - மும்பை இந்தியன்ஸ்
2011 - 2012 - டெக்கான் சார்ஜஸ்
2013 - 2018 - சன் ரைசர்ஸ் ஹைதராபாத்
2019 - 2021 - டெல்லி கேபிடல்ஸ்
2022 - 2023 - பஞ்சாப் கிங்ஸ்
இந்த நிலையில், இதுவரையில் 206 ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்று 205 போட்டிகளில் பேட்டிங் ஆடியுள்ள ஷிகர் தவான், 27 முறை அவுட்டாகாமல் இருந்துள்ளார். 6244 ரன்கள் வரையில் எடுத்துள்ளார். அதிகபட்சமாக 106 (நாட் அவுட்) ரன்கள் எடுத்துள்ளார். அதுமட்டுமின்றி 701 பவுண்டரிகளும், 136 சிக்சர்களும் விளாசியுள்ளார். 95 கேட்சுகள் பிடித்திருக்கிறார். இவர் மட்டும் தான் அதிக பவுண்டரிகள் அடித்தவரின் பட்டியலில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறார்.
பவுண்டரிகள், சிக்சர்கள் இணைத்து:
- ஷிகர் தவான் - 837
- விராட் கோலி - 796
- டேவிட் வார்னர் - 793
- கிறிஸ் கெயில் - 761
- ரோகித் சர்மா - 759
- சுரேஷ் ரெய்னா - 709
- ஏபி டிவிலியர்ஸ் - 664
- ராபின் உத்தப்பா - 663