குண்டா இருக்க, போய் சாப்பிடு; பாகிஸ்தான் வீரரை சைகையால் உருவ கேலி செய்த ரசிகர்; வைரலாகும் வீடியோ!
பாகிஸ்தானின் விக்கெட் கீப்பரான அசாம் கானை அவரது உடல் அமைப்பை வைத்து ரசிகர் ஒருவர் கேலி செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்தது. இதில், பாகிஸ்தான் அணியின் மூத்த வீரர்களாக பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. ஆதலால், பாகிஸ்தான் இளம் வீரர்கள் கொண்ட படையுடன் களம் கண்டது. இந்த 3 டி20 போட்டிகள் கொண்ட தொடருக்கு ஷதாப் கான் கேப்டனாக செயல்பட்டார். இதில் முதல் டி20 போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இரு அணிகளுக்கு இடையிலான 2ஆவது டி20 போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதோடு 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்று கைப்பற்றியது. இதன் மூலமாக ஆப்கானிஸ்தான் வரலாற்று சாதனை படைத்தது. ஆம், பாகிஸ்தானுக்கு எதிராக டி20 தொடரை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்துள்ளது.
WPL 2023 Award Winners: விருது பெற்றவர்களுக்கு எவ்வளவு பரிசுத் தொகை வழங்கப்பட்டது தெரியுமா?
இந்த 2 ஆவது டி20 போட்டியில் பாகிஸ்தானின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான அசாம் கான் ரசிகர்களின் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார். இவர், பேட்ஸ்மேனாக மட்டுமின்றி விக்கெட் கீப்பராகவும் தனது பணியை சரிவர செய்யாமல், பாகிஸ்தானின் ரன் இழப்புக்கு முக்கிய காரணமாகவும் அமைந்துள்ளார். இந்தப் போட்டியில் 4 பந்துகளில் 1 ரன் மட்டுமே எடுத்து வெளியேறியுள்ளார். அதோடு, முதல் டி20 போட்டியில் டக் அவுட் முறையிலும் ஆட்டமிழந்துள்ளார்.
ஷ்ரேயாஸ் ஐயருக்குப் பதிலாக இடைக்கால கேப்டனாகும் ஷர்துல் தாக்கூர், உண்மையாவா?
இதனால், ஆத்திரமடைந்த பாகிஸ்தான் நாட்டு ரசிகர், அசாம் கானின் உருவத்தை வைத்து கேலி செய்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அசாம் கானைப் பார்த்து சைகையின் மூலமாக ஆளுதான் பெருத்துக்கிட்டே (BODY SHAMING பாடி ஷேமிங்) போற போய் சாப்பிடு என்பது போன்று செய்த வீடியோ தான் தற்போது வைரலாகி வருகிறது. இன்னும் சில ரசிகர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுத காட்சி காண்போரையும் கலங்க வைக்கிறது. இந்தியாவுக்கே சவாலாக இருந்த பாகிஸ்தானை ஆப்கானிஸ்தான் வச்சு செய்து வரலாற்று சாதனை படைத்துள்ளது.
இதைத் தொடர்ந்து நேற்று நடந்த கடைசி டி20 போட்டியில் பாகிஸ்தான் 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் விக்கெட் கீப்பரான அசாம் கான் இடம் பெறவில்லை. அவருக்குப் பதிலாக, முகமது ஹரிஷ் இடம் பெற்றார். ஆனால், அவர் 3 பந்துகளில் 1 ரன் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.