இந்திய அணியில் இடம் பெற்று விளையாடி வரும் ரவீந்திர ஜடேஜா ஏ பிரிவிலிருந்து ஏ பிளஸ் பிரிவுக்கு தரம் உயர்த்தப்பட்டதன் மூலமாக அவரது ஆண்டு சம்பளம் ரூ.5 கோடியிலிருந்து ரூ.7 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பிடித்து தொடர்ந்து விளையாடி வரும் வீரர்களுக்கு வருடாந்திர ஒப்பந்தத்தின் அடிப்படையில் சம்பளம் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் 2022 ஆம் ஆண்டு அக்டோபர் முதல் 2023 ஆம் ஆண்டு செப்டம்பருக்கான இந்திய கிரிக்கெட் வீரர்களின் புதிய ஒப்பந்த பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. இதில், ஏ பிளஸ், ஏ பிரிவு, பி பிரிவு, சி பிரிவு என்று வீரர்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளனர். இதன் அடிப்படையில் வீரர்களுக்கு வருடாந்திர சம்பளம் வழங்கப்படுகிறது.
ஏ பிளஸ் - ரூ.7 கோடி
ஏ பிரிவு - ரூ.5 கோடி
பி பிரிவு - ரூ.3 கோடி
சி பிரிவு - ரூ.1 கோடி
தரம் உயர்த்தப்பட்ட ஜடேஜா:
டெஸ்ட், ஒரு நாள் கிரிக்கெட் மற்றும் டி20 ஆகியவற்றில் சிறந்த வீரராக தன்னை நீரூபித்துக் கொண்ட ஜடேஜா ஏ பிரிவிலிருந்து ஏ பிளஸ் பிரிவுக்கு தரம் உயர்த்தப்பட்டதன் மூலமாக அவரது சம்பளம் ரூ.5 கோடியிலிருந்து ரூ.7 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இதுவரையில் 64 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய ரவீந்திர ஜடேஜா, 3 சதங்கள், 18 அரைசதங்கள் உள்பட 2658 ரன்கள் எடுத்துள்ளார். இதே போன்று 174 ஒரு நாள் போட்டிகளில் விளையாடிய ஜடேஜா 13 அரை சதங்கள் அடித்து 2526 ரன்கள் குவித்துள்ளார். மேலும், 63 டி20 போட்டிகளில் விளையாடி 457 ரன்கள் எடுத்துள்ளார். பந்து வீச்சாளராக டெஸ்ட் போட்டிகளில் 264 விக்கெட்டுகளும், ஒரு நாள் போட்டிகளில் 191 விக்கெட்டுகளும், டி20ல் 51 விக்கெட்டுகளும் கைப்பற்றியுள்ளா என்பது குறிப்பிடத்தக்கது.
கேஎல் ராகுல்:
ரோகித் சர்மாவுடன் இணைந்து ஓபனிங் இறங்கி விளையாடி வந்த கேஎல் ராகுல் தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் சொதப்பி வந்த நிலையில், அவருக்குப் பதிலாக சுப்மன் கில் களமிறக்கப்பட்டார். தற்போது ராகுல் இடத்தை சுப்மன் கில் பிடித்த நிலையில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். மோசமான ஃபார்ம் காரணமாக ரூ.5 கோடி வாங்கிக் கொண்டிருந்த கேஎல் ராகுல் தற்போது ரூ.3 கோடி வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
ஜூனியர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழ்நாடு தங்கம் வென்று அசத்தல்!
புவனேஷ்வர் குமார்:
இதே போன்று தற்போது 8 வருடங்களுக்குப் பிரகு சஞ்சு சாம்சன் சி பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு ரூ.1 கோடி சம்பளம். ஆனால், இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான புவனேஷ்வர் குமார் ஒப்பந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். ஆதலால், இனிவரும் போட்டிகளில் அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்படுமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.
சேப்பாக்கம் மைதானத்தில் ரசிச்சு ரசிச்சு ரசிகர்கள் அமரும் இருக்கைகளுக்கு பெயிண்ட் அடிக்கும் தோனி!
