தந்தையை காணவில்லை என்று புகார் கொடுத்து திரும்ப கிடைத்த இந்திய கிரிக்கெட் வீரர் கேதர் ஜாதவ்வின் தந்தை!
நடைபயிற்சியின் போது தந்தையை காணவில்லை என்று கேதர் ஜாதவ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள நிலையில், சிறிது நேரத்திலேயே அவரது தந்தை திரும்ப கிடைத்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் பிறந்த கேதர் ஜாதவ், கடந்த 2014 ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியின் மூலம் இந்திய அணியில் இடம் பெற்றார். இதுவரையில் 73 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 2 முறை சதமும், 6 அரைசதங்கள் உள்பட 1389 ரன்கள் குவித்துள்ளார். இதே போன்று 9 டி20 போட்டிகளில் விளையாடி ஒரு முறை அரை சதம் அடித்துள்ளார். ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்றார். அதன் பிறகு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடினார்.
WPL 2023 Award Winners: விருது பெற்றவர்களுக்கு எவ்வளவு பரிசுத் தொகை வழங்கப்பட்டது தெரியுமா?
கடந்த ஆண்டு எந்த அணியும் அவரை ஏலத்தில் எடுக்கவில்லை. இந்த ஆண்டும் அப்படியே நடந்துள்ளது. எனினும், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து இன்னும் அவர் ஓய்வு பெறவில்லை. இந்த நிலையில், நேற்று காலையில் அம்மா, அப்பாவுடன் நடைபயிற்சி சென்றிருந்த அவர், தந்தை மகாதேவ் ஜாதவ்வை காணவில்லை என்று அலங்காரர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அவர் அளித்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது: எனது தந்தை டிமென்ஷியா என்ற மன சோர்வு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். நான் கோத்ருட் பகுதியிலுள்ள சிட்டி பிரைடு திரையரங்கம் அருகிலுள்ள எனது வீட்டில் தந்தை மகாதேவ் ஜாதவ் (75) மற்றும் அம்மா மந்தாகினியுடன் (65) வசித்து வருகிறேன். அவர் எங்கள் வாகன நிறுத்துமிடத்தில் சிறிது நேரம் நடைபயிற்சி செய்துவிட்டு திடீரென்று கேட்டிற்கு வெளியே சென்றார். நாங்கள் அவரைக் கண்டுபிடிக்க முயற்சித்தோம், ஆனால் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை, எனவே தான் இந்த புகாரை கொடுக்கிறேன் என்று கூறியுள்ளார்.
ஷ்ரேயாஸ் ஐயருக்குப் பதிலாக இடைக்கால கேப்டனாகும் ஷர்துல் தாக்கூர், உண்மையாவா?
மேலும், எனது தந்தை வெள்ளை நிற சட்டையும், சாம்பல் நிற பேன்ட்டும் அணிந்து, கருப்புச் சப்பல் அணிந்துள்ளார். மாநிறம், கண்ணாடி அணிந்துள்ளார். அவருக்கு அறுவை சிகிச்சையின் காரணமாக அவரது கன்னத்தில் ஒரு அடையாளம் இருக்கும். அவர் பணமோ, மொபைல் போனோ எடுத்துச் செல்லவில்லை. அவர் மராத்தி பேசுவார். ஆனால், தொடர்ந்து அவரால் பேச முடியாது என்று அந்த புகாரில் குறிப்பிட்டிருந்தார்.
இந்தப் புகாரைத் தொடர்ந்து கேதர் ஜாதவ்வின் தந்தையை தேடி வந்த போலீசார், மற்ற காவல் நிலையங்களுக்கும் இந்த புகார் குறித்து தெரியப்படுத்தினர். இந்த நிலையில் தான் முந்துவா காவல் நிலைய அதிகாரிகள் அவரை மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த கேதர் ஜாதவ், எனது தந்தைக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.